Advertisment

ஜெயிலர் படம் எப்படி இருக்கு? - ரஜினி பதில்

rajini about jailer movie

ரஜினி தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கும் 'ஜெயிலர்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மலையாளம் மற்றும் கன்னடத்தில் முன்னணி நடிகர்களாக இருக்கும் சிவராஜ் குமார், மோகன்லால் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில், இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோர் ரஜினியுடன் நடிக்கின்றனர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை (10.08.2023) இப்படம் திரையரங்கில் வெளியாகிறது.

Advertisment

இதனிடையே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் 'லால் சலாம்' படத்தில் நடித்துள்ளார். படத்தின் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தை அடுத்து லைகா தயாரிப்பில் த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். முன்னதாக 2010 ஆம் ஆண்டு வரை தனது ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும், இமயமலைக்குச் சென்று வருவதை வழக்கமாக வைத்திருந்தார் ரஜினிகாந்த். உடல்நலக்குறைவு காரணமாக இடையில் சில ஆண்டுகளாக இமயமலை செல்லாமல் இருந்த அவர், மீண்டும் காலா, 2.0 படங்களின் படப்பிடிப்பு முடிந்ததும், தொடர்ந்தார். பின்பு கரோனா காரணமாகக் கடந்த 2 ஆண்டுகளாக இமயமலைக்குச் செல்லாமல் இருந்த நிலையில், கடந்த 6 ஆம் தேதி ரஜினி இமயமலை செல்லத் திட்டமிட்டுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. மேலும் அங்கு ஒரு வாரம் தங்கி பத்ரிநாத், கேதர்நாத், பாபாஜி குகை உள்ளிட்ட புனித தலங்களுக்கும் செல்லவுள்ளதாகவும் கூறப்பட்டது.

Advertisment

இந்நிலையில் ஜெயிலர் படம் பார்த்துள்ளார் ரஜினி. படம் பார்த்துவிட்டு இமயமலை பயணம் புறப்பட்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் படம் எப்படி இருக்கிறது என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "படம் எப்படி இருக்குது என்பதை நீங்கள் தான் பார்த்து சொல்ல வேண்டும்" என்றார். தொடர்ந்து இமயமலை பயணம் குறித்து பேசுகையில், "கொரோனோ வந்ததால் இமயமலைக்கு போகமுடியவில்லை. 4 வருஷத்திற்கு பிறகு போகிறேன்" என்றார்.

Actor Rajinikanth
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe