லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கூலி’. இப்படத்தில் தெலுங்கு முன்னணி நடிகர் நாகர்ஜுனா, கன்னட நடிகர் உபேந்திரா கலீஷா, மலையாள நடிகர் சௌபின் சாஹிர், சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். பாலிவுட் நடிகர் ஆமீர்கான் கேமியோ ரோலில் நடித்துள்ளார். மேலும் பூஜா ஹெக்டே ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகி வரும் இப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்தின் படப்பிப்பிடிப்பு கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கி பல்வேறு கட்டங்களாக பல இடங்களில் நடந்து கடந்த மார்ச் மாதம் முடிந்திருந்தது. இதனிடையே படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. பின்பு ‘சிக்குடு வைப்’ என்ற பாடலில் கிளிம்ஸ் வெளியாகியிருந்தது. அடுத்தாக படம் வெளியாகுவதற்கு 100 நாட்கள் தான் இருக்கிறது என்பதை நினைவுபடுத்து ஒரு முன்னோட்ட காட்சி வெளியானது. இதில் பின்னணியில் இடம் பெற்ற ‘பவர்ஹவுஸ்’ பாடம் சமூக வலைதளத்தில் வைரலானது. இதனைத் தொடர்ந்து ‘சிக்குடு வைப்’ பாடலின் மியூசிக் வீடியோ, பூஜா ஹெக்டே நடனமாடிய ‘மோனிகா’ பாடலின் லிரிக் வீடியோ மற்றும் வைரலான ‘பவர்ஹவுஸ்’ லிரிக் வீடியோ வைரலானது.
இந்த நிலையில் படத்தின் ட்ரைலர் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகவுள்ளது. படத்தின் முழு பாடல்களும் ஆடியோ தளங்களான ஸ்பாட்டிஃபை, யூட்யூப் மியூசில் உள்ளிட்டவைகளில் வெளியாகியுள்ளது. ஆடியோ லான்ச் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது. நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஆமீர்கான், நாகர்ஜூனா உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் இருக்கும் பிரபலங்கள் சென்னை வருகை தந்துள்ளனர். இந்த நிலையில் விழா அரங்கத்திற்குள் ரஜினி சென்றுள்ளார். அப்போது நுழைவு வாயில் அவரை வரவேற்க ரசிகர்கள் நின்று கொண்டிருந்தனர். அவரை பார்த்ததும் காரின் சன் ரூஃபின் வழியாக ஏறி நின்று ரசிகர்களுக்கு கையசைத்து மகிழ்ந்தார். பின்பு அவரிடம் செய்தியாளர்கள், ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்போடு இருப்பதாக கேள்வி கேட்டார்கள். அதற்கு பதிலளித்த அவர், “எனக்கும் அதே எதிர்பார்ப்பு இருக்கு. எல்லாத்துக்கும் மேல ஆண்டவன் இருக்கான். நன்றி” என்றார்.
Follow Us