rajini about balakrishna in veera simha reddy

Advertisment

தெலுங்கு முன்னணிநடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் கடந்த பொங்கல் விழாவை முன்னிட்டு வெளியான படம் 'வீர சிம்ஹா ரெட்டி'. இப்படத்திற்கு பாலகிருஷ்ணா ரசிகர்கள் வழக்கம்போல பட்டாசு, பேனர் எனக் கொண்டாடினர். அந்த கொண்டாட்டம் தொடர்பாக திரையரங்கில் தீ விபத்து, கிடா வெட்டு என பல சம்பவங்கள் இணையத்தில் வைரலானது.

இப்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப்பெற்று ரூ.10 கோடி வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் ரஜினிகாந்த் இப்படத்தைப் பார்த்து படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இப்படத்தின் இயக்குநர்கோபிசந்த் மலினேனி ட்விட்டரில், "உண்மையிலேயே ஒரு அற்புதமான தருணம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாரிடம் இருந்துஃபோன் கால் வந்தது. படத்தை பார்த்து மிகவும் பிடித்ததாக கூறினார். அவர் உணர்ச்சி மிகுந்து படத்தை பற்றி பாராட்டிய வார்த்தைகள், இதைவிட உலகில் சிறந்தது எதுவும் இல்லை. நன்றி ரஜினி சார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் நடந்த இப்படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியில் பாலகிருஷ்ணா, பழம் பெரும் தெலுங்கு நடிகர்அக்கினேனி நாகேஸ்வர ராவ் பெயரைமரியாதைஇல்லாமல் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்குஅக்கினேனிகுடும்பத்தைச் சார்ந்தநாக சைதன்யா மற்றும் அகில் அக்கினேனிஉள்ளிட்ட சிலர் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் பின்புஅக்கினேனி நாகேஸ்வர ராவ் மீதுஎனக்கு மிகுந்த மரியாதை உண்டு. நான் சொல்ல வந்தது தவறாக புரிந்துகொள்ளப்பட்டது" என ஒரு நிகழ்ச்சியில் விளக்கம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment