Advertisment

“ரொம்ப ஆட்டம் ஆடக்கூடாது” - ரஜினிகாந்த்

 rajini about amitbh bachan in vettaiyan audio launch

ரஜினிகாந்த் நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வேட்டையன்’. இப்படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் நாளை(10.10.2024) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையொட்டி முன்பு நடந்த இசை வெளியீடு பிரம்மாண்டமாக நடந்தது. இதில் படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.

Advertisment

இதில் ரஜினி பேசுகையில் படக்குழுவினர் பற்றி நிறைய விஷயங்கள் பகிர்ந்தார். அப்போது அமிதாப் பச்சன் குறித்து பேசுகையில், “அந்தா கானூன் படத்தில் நான் நடித்ததற்கு காரணமே அமிதாப் பச்சன்தான். சட்டம் ஒரு இருட்டறை படத்தின் இந்தி ரீமேக் அது. தெலுங்கில் ரீமேக் செஞ்சி ஹிட்டான பிறகு இந்தியில் எடுக்க தொடங்கினர். அதில் நான் நடித்தால் நல்லாயிருக்கும் என அமிதாப்பச்சன் தான் படக்குழுவிடம் சொன்னார். அதுக்குப் பிறகுதான் தயாரிப்பாளர் வந்து என்னை புக் பன்னார். அதில் அமிதாப் கெஸ்ட் ரோலில் நடித்தார். அந்தப் படத்திற்குப் பிறகு எனக்கு அவரை ரொம்ப புடிச்சு போச்சு. அவருக்கும் என்னை ரொம்ப புடிச்சு போச்சு. அதுக்குப்பறம் அவர் நடித்த படத்தில் நான் கெஸ்ட் ரோலில் நடித்தேன். அப்புறம் ஹம் படத்தில் இருவரும் இணைந்து நடித்தோம். மூன்று படமுமே மிகப்பெரிய ஹிட்.

Advertisment

அமிதாப் பச்சன் என்கிற மாமனிதன் பற்றி இப்ப இருக்கிற 2கே கிட்ஸுக்கு தெரியாது. எப்போதுமே இந்தி நடிகர்கள் 11.30க்கு தான் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே வருவாங்க. இவர் உச்சத்தில் இருக்கும் போதே 7 மணிக்கு டப்பிங் போய்டுவார். 8 மணிக்கு மேக்கப் போட ரெடியாகிடுவார். அந்தளவு கரெக்டா இருப்பார். அவர் செட்டுக்கு வந்துட்டார்-னா பசியில் இருக்குறவன் எப்படி சாப்பாடு சாப்பாடு என கேட்பானோ அதே போல் சீன் எங்கே, சீன் எங்கே-ன்னு தான் கேட்பார். சீன் பேப்பரை படிச்சு பார்த்துட்டு நிறைய டவுட் கேட்பார். எல்லா லாஜிக்கும் கேட்டு தெரிஞ்சுப்பார். காமெடி சீன் என்றால் செட் ஃபுல்லாவே கலகலப்பா இருக்கும். அதுவே சீரியஸ் சீன் என்றால் செட்டே சீரியஸா இருக்கும். அவர் கிட்ட இருந்து நிறைய விஷயங்கள் நான் கத்துகிட்டேன்.

அமிதாப் பச்சனுடைய தந்தை மிகப்பெரிய கவிஞர், எழுத்தாளர். அவருடைய தாய் இந்திரா காந்தியோட நெருங்கிய நண்பர். அமிதாப் பச்சனும் ராஜீவ் காந்தியும் ஒரே ஸ்கூல்ல சேர்ந்து படிச்சவங்க. அந்தளவிற்கு நெருக்கிய நட்பு. இந்த விஷயங்கள் யாருக்குமே தெரியாது. இந்த மாதிரி ஒரு குடும்ப பின்னணியில் இருந்து கொண்டு நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டார் அமிதாப். அவருக்கு இருக்குற செல்வாக்குக்கு என்ன வேண்டுமானாலும் பண்ணியிருக்கலாம். ஆனால் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்ட போது அதை அவருடைய அப்பா அம்மாவிடம் சொல்லியிருக்கிறார். அவர்கள் இருவரும் கலந்து பேசி அடுத்த நாள் அமிதாப் பச்சனை கூப்புடுறாங்க. அமிதாபுக்கு ஒரே டென்ஷன். உனக்கு விருப்பம்னு சொன்னால் நாங்கள் எதுவும் பண்ண முடியாது. அதனால் நடிக்க போ... ஆனால் எங்க போனாலும் நம்ம பேரை கெடுத்துரக் கூடாது, இவருடைய பையன் என எங்கையும் சொல்லக்கூடாது என கண்டிஷன் போட்டனர். அதோடு பாம்பே போனால் கூட ஜாஸ்தி பணம் கொடுக்க மாட்டோம். 200 அல்லது 300 கொடுப்போம் என்றனர். அமிதாப் பச்சனும் அதைக் கேட்டு வெறும் 300 ரூபாயுடன் பாம்பேக்கு சென்று ஒரு டப்பா லாட்ஜில் தங்கி, பட வாய்ப்பு இல்லாமல் ரேடியோவில் எல்லாம் வாய்ஸ் கொடுத்திருக்கிறார். அப்புறம் சொந்த முயற்சியில் பெரிய நடிகராக மாறியிருக்கிறார்.

இப்போது இருக்கிற பணக்கார அப்பா அம்மாக்கள் எலாம் அவர்களுடைய பிள்ளைகளை பிரிட்ஜில் வச்சி ப்ரஷ்ஷா வளக்குகிறாங்க. பையன் கேட்டதெல்லாம் பன்னுறாங்க. யோவ்... பணம் கொடுக்க வேண்டாம்... நல்ல குணம் கொடுங்கயா. நல்ல குணம் இருந்தால் பணம் தானா வரும். அது போல அமிதாப் பச்சன் தான் யாரென சொல்லாமல் நடிப்பில் சாதிச்சிருக்கிறார். இது எப்ப வெளியில் தெரிய வந்தது என்றால், அவர் பிஸியான காலகட்டத்தில் மருது படத்தில் ஆக்ஸிடண்ட் ஆகி ஹாஸ்பிட்டலில் சாகுற ஸ்டேஜில் இருந்தார். ஒட்டு மொத்த இந்தியாவும் அவருக்காக ப்ரே பண்ணுச்சு. அப்போது இந்திரா காந்தி வெளிநாட்டில் இருந்தார். அங்கிருந்து இன்னொரு வெளிநாட்டுக்கு செல்ல இருந்த பயணத்தை கேன்சல் பன்னிட்டு அமிதாப் பச்சனைப் பார்க்க இந்தியாவுக்கு வந்தார். அதுக்குப் பிறகுதான் அவருடைய குடும்ப பின்னணி வெளியில் எல்லாருக்கும் தெரியும்.

ஒரு கட்டத்தில் அமிதாப் பச்சனுக்கு 58 வயசு இருக்கும், நடிப்பது போர் அடித்துவிட்டது என சுவிட்சர்லாந்தில் ஒரு வீடு வாங்கி அங்கேயே ஒரு வருடம் தனியே தங்கியிருந்தார். அவரை பார்த்து நானும் பெங்களூருவில் வீடு வாங்கி தனியே இருந்தேன். பின்பு அவர் திரும்பி வந்தார். ஒரு கம்பெனி தொடங்கினார். நிறைய மொழிகளில் படம் பண்ணினார். எல்லாமே தோல்வி. கோடிக்கணக்கில் நஷ்டம். அவரது வீடு கூட ஏலத்தில் வந்துவிட்டது. உடனே அமிதாப்பை பார்த்து, ‘என்ன பச்சன் வீடு தெருவுக்கு வந்துடுச்சா’ என பேசினர். பெரிய உயரத்துக்கு போனா எப்படா விழுவான்னு காத்திகுட்டு இருப்பாங்க. விழ கூட வேண்டாம். கொஞ்சம் சறுக்குனா போதும் விழுந்துட்டாண்டா-ன்னு சொல்வாங்க.

அப்போது அமிதாப்புக்கு வீட்டு வேலைக்காரவங்களுக்கு கூட சம்பளம் கொடுக்க முடியாத நிலைமை. பக்கத்தில் இருக்கும் டைரக்டர் யாஷ் சோப்ரா வீட்டுக்கு நடந்தே போனார். அவரிடம் வேலை கேட்டார். அவர் செக் கொடுத்தவுடன் அதை வாங்காமல் வேலை கொடுத்தால்தான் செக் வாங்குவேன் என சொன்னார். பின்பு அவர் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க ஓகே சொல்லிவிட்டு அந்த செக் மூலம் வேலைக்காரவங்களுக்கு பணம் கொடுத்தார். அதை முடித்துவிட்டு குரோம்பதி கேம் ஷோவில் தானாக போய் கலந்து கொண்டார். பிறகு டிவி-ல பல்பொடி, ஷூ பாலிஸ், அப்பளம், ஊர்கா, ஃபேன் என அனைத்து விளம்பரங்களிலும் நடித்தார். அப்போதெல்லாம் எந்த கேரக்டர் கொடுத்தாலும் அமிதாப் நடிப்பதாக விளம்பரம் வந்தது. அதை பார்த்து எல்லாம் அப்படி சிரிச்சாங்க. அதுக்குப் பிறகு மூணு வருஷம். ஒரு நாளைக்கு 18 மணி நேரம். கடுமையா உழைச்சிட்டு கடனை எல்லாம் அடைச்சி இழந்த வீட்டை வாங்கினார். பின்பு அதே ரோட்டில் இன்னும் மூணு வீடு பெரிசா வாங்கினார். அதுதான் அமிதாப் பச்சன். இதுக்காகத் தான் அவருக்கு அவ்ளோ மரியாதை.

இப்போது அவருக்கு 82வயது. ஒரு நாளைக்கு 10 மணி நேரம் வேலை செய்கிறார். சுறுசுறுப்பா இருக்கார். 64 வயதில் கீழ விழுந்து மேல வர வேண்டும் என்றால் எவ்ளோ பெரிய விஷயம். அதாங்க வாழ்கை. சேலஞ் வேண்டும். நம்மளை மிதிக்கனும்னு சொல்றவங்க மேல தலைமிதிச்சு நாம மேல போணும். காசும் சாமிதான். காசு இருந்தால் எல்லா ஆசாமியும் ஆமா சாமிதான். காசு ஆக்சிஜன் மாதிரி. கண்டிப்பா வேண்டும். அது இல்லைனா வாழ முடியாது. நேரம் ஒரே நாளில் மேல உட்கார வைக்கும். அதே நாளில் கீழே இறக்கிவிடும். எல்லாமே கைவிட்டு போய்விடும். ரொம்ப ஆட்டம் ஆடக்கூடாது. ஜாக்கிரதையா இருக்கனும். பணத்தையும் ஒரே இடத்தில் வைத்தால் கெட்டு போய்விடும். அதை யூஸ் பன்னிக்கிட்டே இருக்கணும். அந்த மாதிரி அமிதாப் பச்சன் எனக்கு ஒரு ரோல் மாடல்” என்றார்.

amitabh bachchan Vettaiyan Actor Rajinikanth
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe