தமிழ்த்திரையுலகில்முடிசூடா மன்னனாகவிளங்கும், சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் ரஜினிகாந்தின் 73 வது பிறந்ததினம் உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களால் இன்றுகொண்டாடப்பட்டு வரும் வேளையில், அவரின்திரையுலக வாழ்வையும் அதனோடு தொடர்புடைய அவரின் சுவாரசியப் பயணங்களையும் இங்கு காண்போம்.
பேருந்துநடத்துநராகத்தனது வாழ்க்கைப் பயணத்தைத்தொடங்கிய ரஜினிகாந்த்தமிழ்த்திரையுலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்து இன்று சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளார். 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும்21 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் எனச்சுமார் 48ஆண்டுகாலம்தொடர்ந்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தையும்உலகம் முழுவதிலும்ரசிகர்கள் பட்டாளத்தையும் கொண்டுள்ளவர் ரஜினி.
தமிழ்த்திரையுலக வரலாற்றை எழுதும் போது ரஜினியைத் தவிர்த்து விட்டு எழுதுவது இயலாத காரியம். அந்தஅளவிற்கு தனது ஸ்டைலான நடிப்பின் மூலம் உட்சநிலைக்குச் சென்று, இன்றும் அந்த நிலையைத்தக்கவைத்துக் கொண்டும் படத்தின் நாயகனாக நடித்துக் கொண்டும்உள்ளார். அரைநூற்றாண்டுக் காலம் தன்னிடம்வைத்துள்ள சூப்பர் ஸ்டார் என்ற பட்டமேஅவரது திறமைக்கு உரிய அங்கீகாரம்.
1975 ஆம் ஆண்டு கா.பாலச்சந்தர் இயக்கிகமல்ஹாசன்ஹீரோவாக நடித்த அபூர்வராகங்கள் படத்தில் தனக்கே உரிய ஸ்டைலில் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். வில்லன், குணச்சித்திர நடிகர்எனத்தொடர்ந்து திரையுலகில் தனது திறமையை வெளிப்படுத்தி கொண்டேஇருந்த ரஜினி, பைரவி என்ற படத்தின் முழுமையாக நாயகனாகி அதன்பிறகு அடுத்த மூன்றே ஆண்டுகளில் தமிழ்த்திரையுலகில் சூப்பர் ஸ்டார் எனும் நிலைக்கு உயர்ந்தார்.
கோடிகளில் வருமானம் வசூலித்தபடங்களின்எண்ணிக்கையில்ரஜினியின்படங்கள்இன்றும் முதல் வரிசையில் இருக்கும். அவரேவிரும்பி நடித்த ராகவேந்திரா கதாபாத்திரம் வரையிலும் எல்லாமேவெற்றி தான்.அவரின் தனித்தன்மையான அபார ஸ்டைலால் ரசிகர்களின் மனதைக்கொள்ளை கொண்டதால்தான்உலகம் முழுவதும்ரஜினிபடங்களுக்கு இன்று வரையிலும் தனி இடம் உண்டு. இவரின் நடிப்பு திறமைக்கு உரிய அங்கீகாரமாகஅரசு வழங்கிய பல்வேறு விருதுகளானகலைமாமணி, பத்ம பூஷன், பத்ம விபூஷன் மற்றும் கடந்த ஆண்டு இவர் பெற்ற திரை உலக வாழ்நாள் சாதனையாளருக்கான தாதாசாகேப் பால்கே விருது என அடுக்கிக் கொண்டே போகலாம்.
90களில் தனது திரைப்படங்களிலும்பொதுவெளியிலும் அவரால் உச்சரிக்கப்பட்ட அரசியல் சம்பந்தமான வார்த்தைகள் அரசியல் வட்டாரத்திலும்பொதுமக்களாலும்ரஜினி ரசிகர்கள் மத்தியிலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வந்தன. அவரது ரசிகர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தபோதிலும், வெளிப்படையாக எவ்வித முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில் 2017 ஆம் ஆண்டு ரசிகர்களைச் சந்திக்கும்நிகழ்ச்சியின் போது தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லைஎன்றும், அதனால்நான் அரசியலுக்கு வருவது உறுதி. நான் முன்னெடுக்க உள்ள அரசியல்ஆன்மீக அரசியலாகஇருக்கும் என்றும் அறிவித்தார். பின்பு தனது உடல்நிலையைக்காரணம் காட்டி அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்றுபின்வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியலுக்கு வரலாம், வராமலும் போகலாம். அவரது ஸ்டைலில் சொல்வதென்றால் அது ஆண்டவன் சொல்வார், ரஜினி செய்வார் என்றே வைத்துக் கொண்டாலும் வரப்போகிற ஜெயிலர் படமும் அதற்கு அடுத்தபடியாக அவர் நடிக்கிற படங்களாக இருந்தாலும் ரசிகர்களை எண்டர்டெயின்மெண்ட் பண்ணிக்கொண்டே அவர் இருக்க வேண்டும்.அவ்வளவு தான்!