nayanthara

சிவகார்த்திகேயன் - நயன்தாரா கூட்டணியில் உருவாகும் படத்தை இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கி வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்திற்கு 'மிஸ்டர் லோக்கல்' என தலைப்பு வைக்கப்பட்ட பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் இப்பட தலைப்பு குறித்து இயக்குனர் எம்.ராஜேஷ் பேசுகையில்...

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

"இந்த படத்துக்காக பல்வேறு தலைப்புகள் பரிசீலிக்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த படத்தின் கதைக்கு 'மிஸ்டர் லோக்கல்' என்கிற தலைப்பு தான் பொருத்தும் என்பது எங்கள் அனைவரின் ஏகோபித்தக் கருத்தாகும். எங்கள் கதாநாயகன் சிவகார்த்திகேயன் திரையில் தரும் சக்தி மிகவும் பாஸிட்டிவானது. அவரது இந்த பாஸிட்டிவிடியை பார்க்கும் போது, ஒரு இயக்குனராக அவருடன் போட்டி போட வேண்டும் என்கிற ஆசை தூண்டப்படுகிறது. கதாநாயகி நயன்தாரா ஒரு அதிசயம். திரையில் அவர் அற்புதங்கள் செய்கிறார். தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா எங்களுக்கு ஒரு மிக பெரிய தூண். அவரது செயல் திறனும், ஒரு கடை நிலை தொழில்நுட்ப கலைஞரிடம் கூட அவர் வைத்து இருக்கும் தொழில் ரீதியான உறவு அவரது வெற்றிக்கு விதை என்றால் மிகை ஆகாது. 'மிஸ்டர் லோக்கல்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளும் நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது. கோடை விடுமுறைக்கு 'மிஸ்டர் லோக்கல்' திரைக்கு வர ஏற்பாடுகள் துரித வேகத்தில் நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது" என்றார்.