sasikumar

அறிமுக இயக்குநர் கதிர்வேலு இயக்கத்தில், செந்தூர் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் டிடி.ராஜா தயாரிப்பில், சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ராஜவம்சம்'. இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். குடும்ப உறவுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில்ராதா ரவி, தம்பி ராமையா, விஜயகுமார், சதிஷ், மனோபாலா, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

Advertisment

இந்த நிலையில், ‘ராஜவம்சம்’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படமானது மார்ச் மாதம் 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இத்தகவலை நடிகர் சசிகுமார் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.