Skip to main content

கார் விபத்தில் மயிரிழையில் உயிர்தப்பிய நடிகர்..! 

Published on 15/11/2019 | Edited on 15/11/2019

தெலுங்கு முன்னணி நடிகர் ராஜசேகர் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் இருந்து அதிகாலையில் காரில் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். ஷம்சாபாத் பகுதியில் சென்றபோது கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அக்கம்பக்கத்தினர் காருக்குள் சிக்கிய ராஜசேகரை வெளியே தூக்கினர்.

 

f

 

 

விபத்து குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வருவதற்கு முன்னால் ராஜசேகரை வேறொரு காரில் வீட்டுக்கு அனுப்பி விட்டனர். விபத்தில் சிக்கிய காரை போலீசார் சோதனை செய்தபோது அதில் இரண்டு வெளிநாட்டு வோட்கா பாட்டில்களும் ஒரு டம்ளரும் இருந்ததாக கூறப்படுகிறது. வேகமாக காரை ஓட்டி வந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே அவரது மனைவி நடிகை ஜீவிதா இதுகுறித்து கூறும்போது...''விபத்தில் ராஜசேகருக்கு காயம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளார். தற்போது நலமாக இருக்கிறார்” என்றார். நடிகர் ராஜசேகர் தமிழில் ‘இதுதாண்டா போலீஸ்’ படத்தில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரபல இயக்குனரும், நடிகருமான ராஜசேகர் காலமானார்!

Published on 08/09/2019 | Edited on 08/09/2019

பிரபல இயக்குனரும், நடிகருமான ராஜசேகர் இன்று காலை ராமச்சந்திரா மருத்துவமனையில் காலமானார். இவர் சமீப காலமாக உடல் நலம் சரியி்ல்லாமல் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

tamil acter and director rajasekar passed away in chennai

பாரதியராஜா இயக்கிய நிழல்கள் படத்தில் ஹீரோக்களில் ஒருவராக நடித்த ராஜசேகர், இது ஒரு பொன்மாலை பொழுது என்ற பாடலில் நடித்து பிரபலமானார். பின்னர் தனது நண்பரான ராபர்ட்டுடன் இணைந்து பாலை வனச்சோலை, மனசுக்குள் மத்தாப்பூ, சின்னப்பூவே மெல்லப் பேசு, தூரம் அதிகமில்லை, பறவைகள் பலவிதம், தூரத்துப் பச்சை, கல்யாணக் காலம். உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கினார். அந்த திரைப்படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. சமீப காலங்களில் சின்னத்திரையில் அதிக அளவில் நடித்து வந்த இவரின் இழப்பிற்கு திரைத்துறையை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


 

Next Story

ஒ.பி.எஸ். ஆதரவாளருக்கு கட்சிப் பதவி ஒரே நாளில் பறிக்கப்பட்டது ஏன்? கலகலத்துக்கிடக்கும் புதுக்கோட்டை

Published on 07/07/2018 | Edited on 07/07/2018
rajasekar

  

 புதுக்கோட்டை முன்னால் நகர்மன்றத் தலைவர் ராஜசேகர். அமைச்சர் விஜயபாஸ்கருடன் கூடிய நட்பால் 2012 புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் நடந்த நகர்மன்ற இடைத்தேர்தலில் ராஜசேகரை வேட்பாளராக்கினார். வேட்பாளராக்கப்பட்ட ராஜசேகர் தனித்து வெற்றி பெற வேண்டும் என்பதற்காக புதிய பார்முலாவை கையாண்டார் அமைச்சர் விஜயபாஸ்கர். ராஜசேகர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும். வேறு எந்த கட்சி வேட்பாளரும் வேட்பு மனு தாக்கல் செய்வதை தடுக்க அ.தி.மு.க அடிபொடிகளை வேட்பு மனுவோடு காலை முதல் மாலை வரை நீண்ட வரிசையாக காத்திருக்க வைத்து வேறு யாரையும் வேட்பு மனு தாக்கல் செய்யவிடாமல் ராஜசேகர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ததாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அந்த அளவுக்கு நெருக்கம் காட்டிய அமைச்சரும் – ராஜசேகரும் ஏனோ கடந்த சில ஆண்டுகளில் பிரிந்துவிட்டனர்.


    அதன் விளைவு ஒ.பி.எஸ். – ஈ.பி.எஸ் அணிகள் பிரிந்த போது முன்னால் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் தொண்டைமானுடன் ராஜசேகர் ஒ.பி.எஸ். அணிக்கு சென்றார். அதன் பிறகு தலைமைகள் ஒன்று சேர்ந்தாலும் புதுக்கோட்டையில் ஒ.பி.எஸ். அணி ஒதுக்கியே வைக்கப்பட்டிருந்தது. அதனால் அடிக்கடி மௌன மோதல்கள் நடந்து வந்தது. ஒ.பி.எஸ். அணியில் இருந்தவர்களுக்கு கட்சி பதவி இல்லை.

 

pd


    

இந்த நிலையில அமைச்சர் கலந்து கொள்ளும் விழாக்களை மாஜிக்கள் கார்த்திக் தொண்டைமானும்,  ராஜசேகரும் அவர்களின் ஆதரவாளர்களும் தவிர்த்து வந்தனர். கடந்த வாரம் அறந்தாங்கி ஒன்றியத்தில் ஒரு பள்ளி தாளாளர் திருமண விழாவிற்கு வைகை செல்வனை அழைத்து வந்தனர் ஒ.பி.எஸ். அணியை சேர்ந்தவர்கள். 


    இந்த நிலையில் தான் 5 ந் தேதி ராஜசேகருக்கு எம்.ஜி.ஆர் இளைஞரணி மாநில இணைச் செயலாளர் பதவியும், கார்த்திக் தொண்டைமானுக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் பதவியையும் அறிவித்தார்கள். அதற்காக ஒ.பி.எஸ். – ஈ.பி.எஸ்.க்கு நன்றி தெரிவித்து பதாகை கூட வைத்தார்கள். 


    ஆனால் 6 ந் தேதி ராஜசேகர் அந்த பதவியில் இருந்து விடுவிக்கப்படுவதாக ஒ.பி.எஸ் – ஈ.பி.எஸ். இணைந்து வெளியிட்ட அறிக்கையால் புதுக்கோட்டை கலகலத்து கிடக்கிறது.
    ஏன் இப்படி கொடுத்தவனே பறித்துக் கொண்டாண்டி என்ற பாடல் வரிகள் போல ஒரே நாளில் பதவி – அடுத்த நாளே பறிப்பு என்றோம்...


    ராஜசேகர், கார்த்திக் தொண்டைமானுக்கு கட்சி பதவி கொடுத்திருப்பதை அமைச்சர் தரப்பால் எற்க முடியவில்லை. அதனால் மாவட்ட அளவில் பொருப்பில் உள்ள சிலரை பொருப்புகளை பறிக்கவில்லை என்றால் ராஜினாமா செய்வோம் என்று கட்சி தலைமை வரை அவசர ஓலை அனுப்ப வைத்துவிட்டாராம் அமைச்சர். அதன் விளைவு தான் ஒரே நாளில் பதவி பறிப்புக்கு காரணம். 


    ஆனால் ஒ.பி.எஸ். அணிக்கு பதவி கொடுப்பது பொல கொடுத்து பறித்துக் கொண்டதால் அவர்களின் ஆதரவாளர்கள் கொஞ்சம் டென்சனாகவே உள்ளதால் விரைவில் பதவி பறிப்புக்கு காரணமாக இருந்தவர்கள் பற்றி சுவரொட்டிகள் கூட வெளியாகலாம் என்று ர.ர.க்களே பேசிக் கொள்கிறார்கள்.