/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/24_24.jpg)
‘பாகுபலி’ படங்களின் வெற்றிக்குப் பிறகு, ‘ஆர்.ஆர்.ஆர்.’ என்ற படத்தை ராஜமௌலி இயக்கி வருகிறார். ராம் சரண், ஜுனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நடித்துவரும் இப்படத்திற்கு கீரவாணி இசையமைக்க, செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
2021 பொங்கல் வெளியீட்டை குறிவைத்தே ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் பணிகளை ராஜமௌலி தொடங்கினார். முன்தயாரிப்பு பணிகள் திட்டமிட்டபடி சுமுகமாக முடிந்து படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில், கரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் படப்பிடிப்பு நடத்துவதில் சிக்கல் எழுந்தது. இயல்புநிலை திரும்பிய பிறகு மீண்டும் படப்பிடிப்பை தொடங்கிய படக்குழு, இந்த வருடம் அக்டோபர் 13ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவித்து, அதற்கேற்ப பணிகளை முடுக்கிவிட்டது.
தற்போது நாடு முழுவதும் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலையால், இந்த முறையும் திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதனால், பட வெளியீட்டு தேதி மாற்றப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. கரோனா பரவலால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை சீராகும் வேகத்திற்கு ஏற்ப, 2022ஆம் ஆண்டின் தொடக்கத்திலோ அல்லது பிற்பகுதியிலோ ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தை திரையரங்கில் எதிர்பார்க்கலாம் என்கின்றன நமக்கு நெருங்கிய சினிமா வட்டாரங்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)