gdz

கரோனாவால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. பாதிப்பில்லாத பகுதிகளில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் அதிகமாகக் கூட்டத்துடன் பணி நடைபெறும் சினிமா ஷூட்டிங்கிற்கு அரசு இன்னும் அனுமதி வழங்காமல் உள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது தமிழ் மற்றும் மலையாளதிரையுலகில் இறுதிக்கட்டப் பணிகள் தொடங்க அரசு அனுமதியளித்து விட்டது. மேலும், சின்னத்திரை ஷூட்டிங்கிற்கும் சில நிபந்தனைகளுடன் தொடங்க அனுமதி வழங்கியுள்ளது.

Advertisment

Advertisment

இதனால் தெலுங்குதிரையுலகில் எப்போது பணிகள் தொடங்குவது என்பதற்கான ஆலோசனைக் கூட்டம் சிரஞ்சீவி வீட்டில் இன்று நடைபெற்றது. இதில் முன்னணி தயாரிப்பாளர்கள் அல்லு அரவிந்த், தில் ராஜு, இயக்குனர்கள் ராஜமெளலி, த்ரிவிக்ரம், கொரட்டலா சிவா உள்ளிட்டோருடன் தெலங்கானா அமைச்சர் ஸ்ரீனிவாச யாதவும் கலந்து கொண்டார். இதில் அனைவரும் தங்களுடைய கருத்துகளை முன்வைத்துள்ளனர். இறுதியாக இறுதிக்கட்டப் பணிகளை நேற்று மே 22 முதல் தொடங்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து பாகுபலி இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி ட்வீட் செய்துள்ளார். அதில்...

''படப்பிடிப்பிற்குத் திரும்புவதற்கும், இயல்புநிலையை மீண்டும் கொண்டுவருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து நாங்கள் விவாதித்தபோது, ​​எங்களுக்குப் பரிவு காட்டியதற்காக தெலுங்கானா முதல்வர், கே.சி.ஆர் ஐயாவுக்கு நான் மனமார்ந்த நன்றி. அவர் பொறுமையாக எங்களது கோரிக்கையைக் கேட்டார். மேலும் தேவையான ஆறுதலான வார்த்தைகளை வழங்கினார். நாங்கள் மிகவும் விரும்புவதைச் செய்ய மிக விரைவில் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வருவதாக அவர் உறுதியளித்தார். இதை முதல்வர் ஐயாவின் கவனத்திற்கு எடுத்துச் சென்றதற்கு ஒளிப்பதிவாளர் அமைச்சர் தலசானி ஐயாவுக்கு நன்றி'' எனக் கூறியுள்ளார்.