/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/75_63.jpg)
மலையாளத்தில் திலீஷ் கருணாகரன் இயக்கத்தில் மேத்யூ தாமஸ் நடிப்பில் கடந்த மே 2ஆம் தேதி 3டியில் வெளியான படம் ‘லவ்லி’. மலையாளத்தை தாண்டி தமிழ், இந்தி உட்பட மொத்தம் நான்கு மொழிகளில் வெளியானது. சரண்யா மற்றும் அமர் ராமச்சந்திரன் தயாரித்துள்ள இப்படத்தில் உன்னிமயா பிரசாத், மனோஜ் கே ஜெயன், அஸ்வதி மனோகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விஷ்ணு விஜய், பிஜிபால் ஆகிய இரண்டு பேர் இப்படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில் ஒரு ‘ஈ’ முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறது. இதற்காக பெரும் செலவில் வி.எஃப்.எக்ஸ். பணிகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்த ஈ கதாபாத்திரம் தற்போது படக்குழுவினருக்கு சிக்கலை கொண்டு வந்துள்ளது. அந்த ஈ கதாபாத்திரம் தங்கள் படத்தில் வரும் ஈ கதாபாத்திரம் போல் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ராஜமௌலி இயக்கிய ‘நான் ஈ’ படத் தயாரிப்பு நிறுவனம் லவ்லி படக்குழுவினருக்கு பதிப்புரிமை மீறல் நோட்டிஸ் அனுப்பியுள்ளனர். ஆனால் லவ்லி பட இயக்குநர், இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார். படத்திற்காக வி.எஃப்.எக்ஸ். சுயாதீனமாக உருவாக்கப்பட்டது என்று கூறியுள்ளார். இப்படம் கடந்த 20ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓ.டி.டி. தளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/74_166.jpg)
தெலுங்கு படமான ‘ஈகா’ சாய் கோரபதி தயாரிப்பில் 2012ஆம் ஆண்டு வெளியானது. தமிழில் ‘நான் ஈ’ என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியானது. இப்படத்தில் நானி, சமந்தா, கிச்சா சுதீப் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தின் வி.எஃப்.எக்ஸ். பணிகளுக்காக தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)