உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் திரையுலகமும் முடங்கியுள்ள நிலையில், நடிகர்கள் பலரும் வீட்டிலேயே இருந்துவருகின்ற நிலையில், பவர்ஸ்டார் பவன் கல்யாணை வைத்து படம் இயக்குவது குறித்து பாகுபலி பட இயக்குனர் ராஜமௌலி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதில்...

vxv

Advertisment

"பவன் மீண்டும் திரைப்படங்களில் நடிப்பது சந்தோஷம். ஆனால், முன்பை காட்டிலும் தற்போது அவருடைய பார்வை முற்றிலும் வேறாக உள்ளது. அவர் சமூக சேவைகளில் அதிக கவனம் செலுத்துவதால் திரைப்படங்களுக்கு அதிக நேரத்தைச் செலவிட முடியவில்லை. அதே நேரத்தில், ஒரு படத்தை முடிக்க எனக்கு அதிக காலம் எடுக்கிறது. இந்தச் சூழலில், நான் பவன் கல்யாணோடு ஒரு படம் பண்ணுவது என்பது இப்போதைக்கு இயலாத ஒன்று'' என கூறியுள்ளார்.