Advertisment

சத்யம் சினிமாஸ் டீமுடன் டீல் போட்ட பிக்பாஸ் ஆரவ் !

ஆரவ், ஆஷிமா நர்வால் இணைந்து நடித்திருக்கும் 'ராஜபீமா' படத்தை நரேஷ் சம்பத் இயக்கியிருக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் இசை உரிமைகளை சத்யம் திரையரங்கின் திங்க் மியூசிக் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.

Advertisment

arav

மேலும் இது குறித்து தயாரிப்பாளர் எஸ்.மோகன் கூறும்போது.... "ஒரு தயாரிப்பாளராக மட்டுமல்லாமல், சாதாரண ஒரு இசை ரசிகனாக இசைக்கு பொருத்தமான காட்சிகளை பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய ஒரு அனுபவம். இசையமைப்பாளர் சைமன் கே கிங் மிகச்சிறந்த ஒரு திறமைசாலி. உலகளாவிய இசை ரசிகர்களின் கவனத்தை உடனடியாக ஈர்க்கக் கூடிய திறமை அவருக்கு உண்டு என்று கூறுவேன். அவரது சமீபத்திய படைப்புகளைத் தொடர்ந்து, ராஜபீமாவிற்கு எப்படி இசையை அளிப்பார் என ஒரு யூகத்தில் இருந்தேன்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

ஆனால் அவரது முந்தைய படைப்புகளில் இருந்து வேறுபட்ட மற்றும் புதிய பாணியுடன் என் எதிர்பார்ப்புகளை மிஞ்சி விட்டார். நான் அவரது பின்னணி இசையுடன் சில காட்சிகளை பார்க்க நேர்ந்தது, மிக அற்புதமாக வந்திருக்கிறது. படத்தில் அவரது சிறந்த உழைப்பை கொடுத்திருக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக, ராஜபீமாவின் ஆடியோ உரிமைகளை திங்க் மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. திங்க் மியூசிக் பல ஆல்பங்களை மார்க்கெட்டிங் மற்றும் விளம்பரப்படுத்துவதற்கு மிகவும் புகழ்பெற்றது. ராஜபீமா சரியான ஆட்களிடம் சென்று சேர்ந்திருப்பதால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்" என்றார். மனிதன் - மிருகம் முரண்பாடுகளை பற்றி பேசும் இந்த ராஜபீமா, பாலக்காடு, பொள்ளாச்சி மற்றும் தாய்லாந்து ஆகிய அழகான இடங்களில் படப் பிடிக்கப்பட்டுள்ளது. படத்தின் இசை, ட்ரைலர் மற்றும் பட வெளியீடு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர்.

Raja Bheema arav
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe