hdhdhdhd

Advertisment

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி பிரபல தொழிலதிபர் ராஜ் குந்த்ரா என்பவரை கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் இணைந்து பல்வேறு தொழிலில் ஈடுபட்டு வந்த நிலையில், ஷில்பாவின் கணவர் ராஜ் குந்த்ராவை ஆபாசப் படங்கள் தயாரித்த வழக்கில் மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர். ராஜ் குந்த்ரா மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு வழக்கு குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும், அவர் மீது ஐபிசி பிரிவுகள் 420 (மோசடி), 34 (பொது நோக்கம்), 292 மற்றும் 293 (ஆபாசமான மற்றும் அநாகரீகமான விளம்பரங்கள் மற்றும் காட்சிகள் வெளியிட்டது), மற்றும் ஐடி சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகள் மற்றும் பெண்களின் அநாகரிக பிரதிநிதித்துவம் (தடை) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மும்பை போலீஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

"கடந்த பிப்ரவரி மாதம் பெண் ஒருவர் மூலம் மும்பையில் சிலர் ஆபாசப் படங்களை உருவாக்கி, அதனை செயலிகள் மூலம் வெளியிடுவதாகக் குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். தற்போது இந்த குற்றத்தில் ராஜ் குந்த்ராவுக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இதில் முக்கிய குற்றவாளியாக உள்ளார். இது தொடர்பாக எங்களிடம் போதுமான ஆதாரங்கள் உள்ளது" எனக் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தற்போது பாலிவுட் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.