Advertisment

கரோனாவிற்கு நடுவே முழுப்படத்தில் நடித்து முடித்த பிக்பாஸ் ரைசா வில்சன்!

fvdagasg

Advertisment

கரோனா அச்சுறுத்தலால் இயக்குநர் கார்த்திக் ராஜு இயக்கி வந்த 'சூரப்பனகை' படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. இதனால் கரோனா அச்சுறுத்தல் தொடங்கியவுடன், குறைந்த குழுவினர் கொண்டு பணிபுரியும் வகையில் கதையொன்றை யோசித்து எழுதினார் கார்த்திக் ராஜு. அது நல்லதொரு த்ரில்லராக முடியவே, 'சூர்ப்பனகை' தயாரிப்பாளர் ராஜ்சேகர் வர்மாவும் நானே தயாரிக்கிறேன் என்று கூறவே உடனடியாக படப்பிடிப்பை தொடங்கி முடித்தும் விட்டார்கள். கரோனா காலத்தில் உருவான இந்த உணர்வுப்பூர்வமான த்ரில்லர் படத்தில் ரைசா வில்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதுகுறித்து இயக்குநர் கார்த்திக் ராஜு பேசும்போது... "ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் சார், சண்டை பயிற்சியாளர் திலிப் சுப்பராயன், இசையமைப்பாளர் சாம் சிஎஸ், எடிட்டர் சாபு ஜோசப் மற்றும் நான், நாங்கள் ஏதாவது ஆக்கப்பூர்வமாக செய்யவேண்டும் என்று தீர்மானித்தோம். குறைவான படக்குழுவினருடன் படப்பிடிப்பை நடத்த நாங்கள் அனுமதி பெற்றோம். என்னுடைய 'சூர்ப்பனகை' படத்தை தயாரித்த ராஜ்சேகர் வர்மா இந்த படத்தையும் தயாரித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம்சிறுமலை இந்த கதைக்கு ஏற்ற களமாக இருந்தது. கரோனா தொற்று இல்லாத அந்த கிராமத்தில் 500-க்கும் குறைவான குடும்பங்களே வசிக்கிறார்கள். படப்பிடிப்புக்கும் முன்பும், பின்பும் நடிகர்கள், படக்குழுவினர் உட்பட 28 பேருக்கும் கோவிட் 19 பரிசோதனை செய்யப்பட்டது. முழுபடப்பிடிப்பையும்முடித்து திரும்பிவிட்டோம், தற்போது எடிட்டிங் வேலைகளும் முடிந்துவிட்டது. டப்பிங் பணிகள் இன்று தொடங்கவுள்ளது. இது ஒரு தாய், ஒரு மகள் மற்றும் ஒரு பதின்வயது இளைஞர் ஆகியோரை பற்றிய படம். ரைசா வில்சன் மற்றும் ஹரீஷ் உத்தமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமிழ் பதிப்பில் பால சரவணன், காளி வெங்கட் ஆகியோரும் 'கைதி' படத்தில் கார்த்தியின் மகளாக நடித்த மோனிகாவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். எமோஷ்னலான த்ரில்லர் பாணியில் இந்த படம் இருக்கும்" என்றார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகவுள்ளது.

raiza willson
இதையும் படியுங்கள்
Subscribe