dbvddv

Advertisment

'வேலையில்லா பட்டதாரி 2' படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்த ரைஸா வில்சன், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான 'பியார் பிரேமா காதல்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தற்போது 'தி சேஸ்', 'காதலிக்க யாருமில்லை', 'எஃப்.ஐ.ஆர்' உள்ளிட்ட பல படங்களில் பிஸியாக நடித்துவரும் ரைஸா, சமீபத்தில் ஃபேஷியல் சிகிச்சைக்காக ஒரு தோல் மருத்துவரிடம் சென்றுள்ளார். அங்கு அவருக்கு டாக்டர் அளித்த சிகிச்சை காரணமாக தன்னுடைய முகத்தில் வீக்கம் ஏற்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டிய நடிகை ரைசா, சிகிச்சைக்குப் பிறகான தன்னுடைய புகைப்படத்தையும் பகிர்ந்து பெரும் பரபரப்பைக் கிளப்பினார்.

gdsggds

அதன் பிறகு, இரு தரப்புகளும் மாறிமாறி நஷ்டஈடு கோரிவருகின்றனர். இதற்கிடையே சில நாட்களுக்குப் பிறகு தன்னுடைய முகம் பழைய நிலைக்குத் திரும்பிவிட்டதாக ரைசா அவ்வப்போது புகைப்படங்களை சமூகவலைதளத்தில் பதிவிட்டுவருகிறார். கூடவே கவர்ச்சியாக இருக்கும் புகைப்படங்களையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டுவருகிறார். இணையத்தில் வைரலாகிவரும் இந்தப் புகைப்படங்கள் தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதைக் கண்ட ரசிகர்கள் சிலர் ரைசாவை கேலி செய்தும், ஆதரித்தும், விமர்சித்தும் கருத்துகள் பதிவிட்டனர். இந்த நிலையில், இதற்குப் பதிலளித்து நடிகை ரைசா வில்சன் கருத்து பதிவிட்டுள்ளார். அதில்...

Advertisment

vsdvdsvsd

"ஒரு நடிகை நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படம் சாதாரண விஷயம். பெரிய பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. எனக்குப் பிடித்த உடையை நான் அணிகிறேன். இதனால் கெட்ட பெயர் வந்துவிடுமா என்ன. நான் அப்படி நினைக்கவில்லை. எனது பதிவுகள் பிடிக்காதவர்கள் என்னைப் பின்தொடர வேண்டாம். போலி கணக்கு வைத்திருப்பவர்கள்தான் இதுபோல் மோசமான பதிவுகள் வெளியிட்டு வெறுப்பை உமிழ்கிறார்கள். அவர்களை நினைத்து நான் வருத்தப்படுகிறேன். வெறுப்பு காட்டுபவர்கள் எதிர்மறையாக இருக்கிறார்கள். எல்லாவற்றையும் எதிர்மறையாக பார்த்தால் உங்களுக்கு மகிழ்ச்சியே இருக்காது'' என்றார்.