நடிகை வித்யா பாலன் நடிப்பில் வெளிவந்த 'டர்ட்டி பிக்சர்' பாணியில் நடிகை ராய் லட்சுமி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'ஜூலி 2' படம் எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லை என்றாலும் நடிப்பில் ராய் லட்சுமிக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. இதனால் ஹிந்தி பட உலகில் நன்கு அறியப்பட்டவருக்கு ஹிந்தி பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்துள்ளன. இந்நிலையில் தனது ஹிந்தி சினிமாவையும், குடும்பத்தையும் பற்றி ராய் லட்சுமி பேசும்போது.... "பெரிய ஹீரோ படத்தில் அறிமுகமாகி, பிரபலமாக வேண்டும் என்று தான் எல்லோரும் விரும்புவார்கள். நானும் அப்படித்தான் ஆசைப்பட்டேன். என்50வது படத்தில் நாயகியை மையமாக வைத்து ஒரு கதையில் நடிக்க விரும்பினேன்.நான் எதிர்பார்த்தப்படியே கதை கிடைத்தது. எனவே தான் 'ஜூலி 2' படத்தில் நடித்தேன். எதிர்பார்த்த அளவு அந்த படம் ஓடவில்லை என்று நான் கவலைப்படவில்லை. ஹிந்தி பட உலகில் நல்ல அறிமுகம் கிடைத்திருக்கிறது. இந்த படம் மூலம் ஹிந்தி படங்களில் நடிப்பதற்கான கதவுகள் இப்போது திறந்து இருக்கின்றன. நான் தனி ஆள் இல்லை. எனக்கு எப்போதும் ஆதரவாக இருப்பவர் என் சகோதரி தான். எனது குழந்தை பருவத்தில் இருந்தே அவர் எனக்கு ஆதரவாக இருக்கிறார். சினிமா துறைக்கு நான் வந்தபிறகு எனக்கு முதுகெலும்பு போல ஆகிவிட்டார். எந்த ஒரு பிரச்சனை என்றாலும் ஒரு போன் செய்தால் போதும் என் சகோதரி பார்த்துக்கொள்வார்" என்றார்.
நான் தனி ஆள் இல்லை! - ராய் லட்சுமி பன்ச்
Advertisment