Advertisment

ரஹ்மானின் மெலடி... பிகில் படத்தின் ‘உனக்காக’ பாடல் வெளியானது...

விஜய் நடித்து வரும் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெறும் நிலையில் இன்று 4:30 மணிக்கு உனக்காக என்றொரு மெலடி பாடலை வெளியிட்டுள்ளது படக்குழு.

Advertisment

unakaga

அட்லியின் இயக்கத்தில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. இதில் விஜய் மற்றும் நயன்தாரா முன்னணி கதாப்பாத்திரங்களாக நடித்து வருகின்றனர். ஏற்கனவே இத்திரைப்படத்தின் சிங்கப்பெண்ணே, வெறித்தனம் ஆகிய இரண்டு பாடல்களும் வெளியாகி ரசிகர்களிடையே பேராதரவை பெற்றள்ளது. இந்நிலையில் இப்படத்தின் மூன்றாவது பாடலை வெளியிட்டுள்ளது படக்குழு. உனக்காக என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்.

நெஞ்சை உருக்கும் ரஹ்மானின் மெலடியை ஸ்ரீகாந்த் ஹரிஹரன் மற்றூம் மதுரா தாரா தல்லூரி பாடியுள்ளனர்.

Advertisment

super duper

பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை சென்னையிலுள்ள தனியார் கல்லூரி ஒன்றில் மாலை மிக பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. இதில் பிகில் படத்திலுள்ள அனைத்து பாடல்களும் ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில் கேட்கலாம் என்று சொல்லப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெறித்தனம் பாடலை விஜய் மேடையில் பாட இருக்கிறார் என்றும் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

actor vijay bigil
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe