குஜராத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தை பார்வையிட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அங்கிருந்த பின்னூட்ட குறிப்பேட்டில், "இந்த அற்புதமான பயணத்திற்காக, எனது சிறந்த நண்பர் மோடிக்கு நன்றி" என எழுதியிருந்தார்.

இருநாட்டு உறவுகளையும் மேம்படுத்தும் விதமாக ட்ரம்ப் மற்றும் மெலனியா ட்ரம்ப் ஆகிய இருவரும் இரு நாட்கள் இந்தியாவில் பயணம் மேற்கொள்கின்றனர். இந்த இரண்டு நாட்கள் பயணத்தில் ட்ரம்ப் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளார். இன்று நண்பகல் அகமதாபாத் வந்த ட்ரம்ப் அங்குள்ள சபர்மதி ஆசிரமத்தை பார்வையிட்டார். இதன் பின்னர், அங்கிருக்கும் பார்வையாளர்கள் குறிப்பேட்டில், "இந்த அற்புதமான பயணத்திற்காக, எனது சிறந்த நண்பர் மோடிக்கு நன்றி" எந்த எழுதி கையெழுத்திட்டிருந்தார்.
இந்நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு சபர்மதி ஆசிரமத்தை பார்த்துவிட்டு அங்கிருக்கும் குறிப்பேட்டில் பராக் ஒபாமா எழுதியது வைரலாகி வருகிறது.
அதேபோல ஒரு சம்பவம் நடந்தால் அதுகுறித்து ஒரு சின்ன ட்வீட் போடுவது ஏ.ஆர். ரஹ்மானின் வழக்கமான நடைமுறைகளில் ஒன்று. ஹிந்தி திணிப்பு, சிஏஏ பிரச்சனையின்போது விமானத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இன்று ட்ரம்ப் காந்தி சபர்மதி ஆசிரமத்தில் காந்தி குறித்து எதுவுமே எழுதாத நிலையில் அதை குறும்புத்தனமாக கண்டிக்கும் விதத்தில் காந்தி மண்ணிலிருந்து உங்களை வரவேற்கிறோம் என்று ட்ரம்பை டேக் செய்து அஹிம்சா பாடலை பதிவிட்டுள்ளார்.