Advertisment

மீண்டும் பிசி நடிகராக மாறிய ரஹ்மான்!

rshgsgs

Advertisment

தெலுங்கில் சம்பத் நந்தி இயக்கத்தில் கோபி சந்துடன் நடித்து வரும் நடிகர் ரஹ்மான் விரைவில் இயக்குனர் மணிரத்னத்தின் பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படத்தில் இணைகிறார். இதையடுத்து இயக்குனர் மோகன் ராஜாவின் உதவியாளர் சுப்புராம் இயக்கத்தில் ரஹ்மான் கதாநாயகனாக நடிக்கும் பெயர் சூட்டப்படாத படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாக உள்ளது. மேலும் அஹமத் இயக்கத்தில் அர்ஜுன், 'ஜெயம்' ரவி ஆகியோருடன் இணைந்து 'ஜன கன மன', விஷாலுடன் 'துப்பறிவாளன் 2' உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு என பிசியாக உள்ள நடிகர் ரஹ்மான் மலையாளத்தில் புதுமுக இயக்குனர் சார்ல்ஸ் ஜோசபின் ' சமரா ' படத்திலும் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் காஷ்மீரில் ஆரம்பமாகிறது. 2021 ரஹ்மானுக்கு பிசி ஆண்டாக அமைந்து வருகிறது.

Advertisment

rahman
இதையும் படியுங்கள்
Subscribe