Advertisment

இந்தி தலைப்பில் வெளியான ‘ரகு தாத்தா’பாடல்! 

'Raghu Datta' song released in Hindi title!

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ், மேலும் இவர் இந்தியில் அட்லீ தயாரிப்பில் வருண் தவானுடன் இணைந்து, தெறி பட ரீமெக்கான ‘பேபி ஜான்’ படத்திலும் நடித்துள்ளார். கீர்த்தி சுரேஷ் அவ்வப்போது நடிகைக்கு முக்கியத்துவம் அதிகம் உள்ள கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில் ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கும் கண்ணிவெடி மற்றும் ஹோம்பாலே நிறுவனம் தயாரித்துள்ள ரகு தாத்தா படத்தில் நடித்துள்ளார். சுமன் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இதில் எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸாகிறது.

Advertisment

இப்படத்தின் டீசர் கடந்த ஜனவரி வெளியாகி கவனம் பெற்ற நிலையில், இசை வெளியீட்டு விழா கடந்த 20ஆம் தேதி நடைபெற்றது. அதில் கீர்த்தி சுரேஷ் பேசுகையில் “இப்படம் பெண்கள் மீது வரும் எல்லாவிதமான திணிப்பை பற்றியது, அதில் இந்தி திணிப்பை மட்டும் எடுத்து கதை பண்ணியுள்ளோம்” எனக் கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து அடுத்த நாளே ( 21.07.2024) இப்படத்தின் 'அருகே வா'... என்ற வீடியோ பாடல் வெளியாகியிருந்தது. அதில் ஷான் ரோல்டன் எழுதி, பாடியிருந்தார். அதில் ரவீந்திர விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோருக்கு இடையேயான காதலை விவரிப்பது போல காட்சிபடுத்தப்பட்டிருந்தது.

Advertisment

இந்நிலையில் இப்படத்தின் ‘ஏக் காவ் மே...’ என்ற இந்தி தலைப்பில் லிரிக் வீடியோ ஒன்று வெளியாகியிள்ளது. இப்பாடலை பாக்யம் சங்கர் என்பவர் எழுதியிருக்க ‘கானா’ விமலா என்பவர் பாடியுள்ளார். பாடலில் ‘சேலய கட்டி கால்ல விழுந்தா குத்துவிளக்காமே, ஆனா ஆசைப்பட்டு நான் கவுன மாட்டுனா வேற மாறியாமே’ என்ற வரிகளுடன் ஆணாதிக்கம் மற்றும் பெண்கள் மீது திணிக்கப்படும் சில பிரச்சனைகள்குறித்து இப்பாடல் விவரித்துள்ளது

lyrics video keerthy suresh
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe