r

Advertisment

கரோனாஅச்சுறுத்தல் காரணமாக உலகின் பல நாடுகளிலுள்ள பல துறைகள் முடங்கியுள்ளனர். நோய் பரவுவதைத் தவிர்ப்பதற்காக மக்கள் பலரும் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டிலேயே அடங்கியிருக்கின்றனர். பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அந்நாட்டு அரசாங்கமே அமல்படுத்தியுள்ளது.இதனிடையே, கஷ்டப்படும் மக்களுக்கும் தினக்கூலிப் பணியாளர்களுக்கும் நடிகர் ராகவா லாரன்ஸ் பல உதவிகளைச் செய்து வருகிறார். மேலும் மக்களுக்கு உதவி செய்வதற்காக சக கலைஞர்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.

இந்நிலையில் மகிழ்ச்சியான செய்தி ஒன்றைப் பகிர்ந்துள்ளார். என்னவென்றால், கரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணிற்குப் பிரசவம் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. அதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

"இரண்டு நாட்களுக்கு முன்பு எனக்குத் தெரிந்த ஒரு நபர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார், அவர் 9 மாதகர்ப்பிணியாக இருந்தார், அவர் பிரசவம் செய்யும் நிலையில் இருந்தார், எனவே அவரது கணவரும், மாமானாரும் என்னை அலைபேசியில் அழைத்து மருத்துவமனைக்குச் செல்ல உதவி கேட்டார்கள், இத்தகவலை நான் மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் திரு விஜயபாஸ்கர் அவர்களின் பி.ஏ.வான திரு ரவிஅவர்களுக்குத் தெரிவித்தேன்! அவர் அவசரம் கருதி சம்பந்தப்பட்ட நண்பரின் இல்லத்திற்கே நேரில் சென்று, அந்த கர்ப்பிணிப் பெண்ணை அழைத்துப்போய் கீழ்பாக்கம் கே.எம்.சி மருத்துவமனையில் சேர்த்தார்.

Advertisment

அப்பெண் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்த மருத்துவர்கள். உடனடியாக ஒரு அறுவை சிகிச்சை செய்து தாயையும் குழந்தையையும் வெற்றிகரமாகக் காப்பாற்றினர். இந்தப் பிரசவத்தில் அழகான, ஆரோக்கியமான ஆண் குழந்தை பிறந்து நலமாக உள்ளது!

"அப்பெண் கரோனாவிலிருந்து கூடிய விரைவில் குணமடைவார்" என்று மருத்துவர்கள் எனக்கு உறுதியளித்துள்ளனர். இந்த நேரத்தில்.....தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி சார் அவர்களுக்கும், மாண்புமிகு சுகாதாரத் துறை அமைச்சர் திரு விஜயபாஸ்கர் அவர்களுக்கும், எனது இதயப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்

http://onelink.to/nknapp

Advertisment

அத்துடன்,மருத்துவர்கள் ஜானகி, ஐஸ்வர்யா, மது,சாந்தி,லாவண்யா, ஆகிய அனைவரும் கடவுளுக்குச் சமமானவர்கள். அவர்களுக்கும் எனது இதயப்பூர்வமான நல் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

இதைப் படிக்கும் ஒவ்வொருவரும், தயவுசெய்து அப்பெண் கரோனாவிலிருந்து சீக்கிரமே குணமடைய வேண்டுமென்று பிரார்த்தனை செய்யுங்கள். சேவையே கடவுள்!நன்றி!" என்று தெரிவித்துள்ளர்.