ராகவா லாரன்ஸ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Raghava Lawrence 'rudhran' movie release date announcment

தமிழ் சினிமாவில் நடன இயக்குநராக பிரபலமடைந்த ராகவா லாரன்ஸ், தற்போது நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் 'சந்திரமுகி 2' மற்றும் 'அதிகாரம்' படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே 'ஃபைவ் ஸ்டார் க்ரியேக்ஷன்' சார்பாக கதிரேசன் தயாரித்து இயக்கிவரும் 'ருத்ரன்' படத்தில் நடித்து வருகிறார். சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது.

ஏற்கனவே இப்படம் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. அதன் படி இப்படம் வருகிற டிசம்பர் மாதம் 23-ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் தங்களது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்து, படத்தின் செகண்ட் லுக் போஸ்டரையும் பகிர்ந்துள்ளனர்.

ragava lawrence Rudhran Movie
இதையும் படியுங்கள்
Subscribe