Raghava Lawrence rudhran movie new release date announced

ராகவா லாரன்ஸ், தற்போது 'சந்திரமுகி 2' படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே 'ஃபைவ் ஸ்டார் க்ரியேக்ஷன்' சார்பாக கதிரேசன் தயாரித்து இயக்கிவரும் 'ருத்ரன்' படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.

Advertisment

ஏற்கனவே இப்படம் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வருகிற டிசம்பர் 23ஆம் தேதி வெளியாகும் என அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது அது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதன் படி இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகள் நிறைவடைய சில மாதங்கள் தேவைப்படுவதால் 'காஞ்சனா 2' படம் வெளியான அதே மாதம் ஏப்ரலில் இப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளார்கள்.

Advertisment