Raghava Lawrence praised kavin movie Dada

Advertisment

அறிமுக இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின் நடிப்பில் உருவாகியுள்ள 'டாடா' படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த அபர்ணா தாஸ் நடித்துள்ளார். ஒலிம்பியா மூவிஸ் சார்பில் எஸ்.அம்பேத்குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார்.

இப்படம் பலரது பாராட்டுகளை பெற்று வருகிறது. கமல்ஹாசன், சூரி உள்ளிட்ட திரை பிரபலங்கள் படத்தை பார்த்து படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் 'டாடா' படத்தை பார்த்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "டாடா படத்தை பார்த்தேன். உணர்வுப்பூர்வமாக என்னை ஈர்த்தது. அனைவரும் திரையரங்குகளில் பார்க்கக் கூடிய ஒரு அழகான குடும்பப் படம்" எனக் குறிப்பிட்டார். மேலும், படக்குழுவுக்கும் கவின் மற்றும் அபர்ணா தாஸ் உள்ளிட்டோருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisment