raghava lawrence next with lokesh kanagaraj benz, ar murugados asoosociate venkat mohan in hunter

ராகவா லாரன்ஸ் கடைசியாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் நடித்திருந்தார். கடந்த ஆண்டு வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்போது விஜயகாந்த்தின் மகனான சண்முகப் பாண்டியன் நடிக்கும் படைத் தலைவன் படத்தில் கேமியோ ரோலில் நடிக்கிறார். படங்களில் நடித்துக் கொண்டே நிறைய ஏழை எளிய குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு உதவி செய்து வருகிறார். இதனிடையே விஜய் கட்டிய கோயிலுக்கு விஜய்யின் தாயார் ஷோபாவுடன் அண்மையில் சென்றிருந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது.

raghava lawrence next with lokesh kanagaraj benz, ar murugados asoosociate venkat mohan in hunter

இந்த நிலையில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் அடுத்தடுத்த படங்களின் அறிவிப்புகள்வெளியாகியுள்ளது. முதலில் லோகேஷ் கனகராஜ் கதையில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் பென்ஸ் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் தி ரூட் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து, லோகேஷ் கனகராஜ் தனது ஜி ஸ்குவாட் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். மேலும் வெளியிடவும் செய்கிறார்.

Advertisment

இப்படத்திற்குப் பின் அடுத்த படமாக, சத்ய ஜோதி மற்றும் கோல்டு மைன்ஸ் நிறுவனங்கள் தயாரிப்பில் ஹண்டர் என்ற தலைப்பில் ஒரு படம் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தை ஏ.ஆர் முருகதாஸிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய வெங்கட் மோகன் இயக்குகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். அடுத்த ஆண்டு கோடை விடுமுறையாக இப்படம் வெளியாகவுள்ளது.