raghava lawrence

Advertisment

தமிழ் சினிமாவில் நடனக் கலைஞராக அறிமுகமாகி பின்னர் கடின உழைப்பால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் ராகவா லாரன்ஸ். இவர் நடித்து, இயக்கிய 'காஞ்சனா' படங்கள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனால் 'காஞ்சனா' முதல் பாகத்தை இந்தியில் அக்‌ஷய் குமாரை வைத்து இயக்கும் வாய்ப்பு ராகவா லாரன்ஸிற்கு கிடைத்தது. படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 9ஆம் தேதி ஹாட்ஸ்டாரில் வெளியாவதாக படக்குழு அறிவித்துள்ளது.

ராகவா லாரன்ஸ் இயக்கியிருக்கும் இந்தப் படம், பாலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ராகவா லாரன்ஸ் தனது அடுத்த படத்தின் வேலையைத் தொடங்கியுள்ளார். ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கும் படத்தின் நாயகனாக நடிக்கிறார் ராகவா லாரன்ஸ். மேலும், இந்தப் படத்திற்கு ஜி.விபிரகாஷ் இசையமைப்பாளராகப் பணியாற்றுகிறார் என்று அறிவிக்கப்பட்டது. லாரன்ஸ் மற்றும் ஜி.வி இணைவது இதுவே முதன்முறையாகும்.

Advertisment

ராகவா லாரன்ஸின் பிறந்தநாளை முன்னிட்டு, இப்படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது. ‘ருத்ரன்’ என்று இப்படத்திற்குப் பெயரிடப்பட்டுள்ளது.