/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/raghava-lawrence_5.jpg)
டான்ஸ் மாஸ்டராக தனது சினிமா பயணத்தை தொடங்கிய லாரன்ஸ் படிபடியாக முன்னேறி நடிகர், இயக்குனர் தயாரிப்பாளர் என்று பல அவதாரங்களை சினிமா துறையில் எடுத்துள்ளார். சினிமாவிற்கு வெளியே பலருக்கு பல தொண்டுகள் செய்துள்ளார். பல ஏழை குழந்தைகளை படிக்க வைக்கின்றார். மருத்துவ உதவி பெற முடியாத ஏழை குழந்தைகளுக்கு உதவி செய்து வருகிறார். இதுபோல தனது தொண்டு நிறுவனத்தின் மூலம் எண்ணற்ற உதவிகளை செய்து வருகிறார் லாரன்ஸ்.
இந்நிலையில் கடலூரைச் சேர்ந்த ராகவா லாரன்ஸின் ரசிகர் அஜித் என்பவர் வீட்டில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தில் அவரும், அவரது மனைவியும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அஜித்தின் மனைவி இறந்துவிட்டார். இந்த சம்பவம் கூட தெரியாத நிலையில் மயக்கமாக இருக்கிறார் அஜித்.
லாரன்ஸிடம், ராகவா லாரன்ஸ் மக்கள் நற்பணி மன்றத்தின் பொதுச்செயலாளர் ஜெ. சங்கர் இச்செய்தி குறித்து கூறியுள்ளார். இதன்பின் உடனடியாக ராகவா லாரன்ஸ் தனது ரசிகர் அஜித்திற்கு உதவும் வகையில், அவர் சிகிச்சை பெற்று வரும் கண்ணன் மருத்துவமனை வங்கிக் கணக்கில் ரூ. 50,000 அனுப்பி அஜித்தின் மருத்துவ செலவிற்கு உதவி செய்துள்ளார்.
ராகவா லாரன்ஸின் இச்செயலுக்கு பலரும் சமூக ஊடகங்களில் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)