Advertisment

தூய்மைப் பணியாளார்களுக்கு நிதி உதவி செய்த ராகவா லாரன்ஸ்!

lawrence

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் கரோனாவால் இந்தியாவில் கடந்த மூன்று மாதங்களாக தேசிய ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் வேலையின்றி வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்குப் பல பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்து வந்தனர். திரையுலகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் உதவி செய்யாமல், பொது மக்களுக்கும் உதவி செய்கிறார்கள்.

Advertisment

அந்த வகையில் நடிகர் ராகவா லாரன்ஸ் தூய்மைப் பணியாளார்களுக்கு நிவாரணத் தொகையை அவரவர் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தியுள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ்.

Advertisment

முன்னதாக கரோனா தடுப்புப் பணிகளுக்காக ரூ.3 கோடியை பலருக்குப் பிரித்து நிவாரண நிதி அளித்தார்.

தற்போது 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்க ராகவா லாரன்ஸ் ஒப்பந்தமாகியுள்ளார். அந்தப் படத்தில் அவர் பெறவிருக்கும் சம்பளத்திலிருந்து ரூ.25 லட்சத்தை தூய்மைப்பணியாளர்களுக்கு வழங்கப் போவதாக கடந்த ஏப்ரல் மாதமே அறிவித்திருந்தார்.

சொன்னதைப்போல, தற்போது 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிப்பாளர் கதிரேசன் மூலம் 3,385 தூய்மைப் பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.750/- அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார். இந்தத் தகவலை தெரிவித்து அவர்களுக்கு நன்றி கூறி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் ராகவா லாரன்ஸ்.

actor raghava lawrence
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe