ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் பட வெற்றியை தொடர்ந்து, ஏகப்பட்ட படங்களில் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. ரஜினி - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் விஜயகாந்தின் மகனான சண்முகப் பாண்டியன் நடிக்கும் படைத் தலைவன் படத்தில் கேமியோ ரோலில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சிறப்பு தோற்றத்தில் ரஜினி ஒரு படம் நடிக்கவுள்ளதாகவும் அதில் ஹீரோவாக ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இப்படி அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருப்பதாக தெரியும் சூழலில், தனது ரசிகர் ஒருவர் இறந்துள்ளதாக ராகவா லாரன்ஸ் வேதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “நண்பர்கள் மற்றும் ரசிகர்களே, கடந்த முறை சென்னையில் ரசிகர்கள் சந்திப்பு போட்டோஷூட்டின் போது எனது ரசிகர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அது மிகவும் மனவேதனையாக இருந்தது. அதனால் அன்று, என் ரசிகர்கள் எனக்காகப் பயணம் செய்யக் கூடாது, அவர்களுக்காகப் பயணம் செய்து அவர்களின் ஊரில் போட்டோஷூட் நடத்த முடிவு செய்தேன். நாளை முதல் அதை தொடங்குகிறேன், முதல் இடம் விழுப்புரம் லோகலட்சுமி மஹாலில் நடக்கிறது. நாளை சந்திப்போம்” என குறிப்பிட்டுள்ளார்.