Advertisment

கமல் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ராகவா லாரன்ஸ்!

தர்பார் இசை வெளியீட்டு விழாவில் ராகவா லாரன்ஸ் கலந்துகொண்டு பேசும்போது, நான் சிறு வயதில் கமல் பட போஸ்டர்களில் சாணி அடித்திருக்கிறேன். அது அறியாத வயதில் செய்தது என்று மேடையில் பேசியிருந்தார்.

Advertisment

raghava lawrence

இந்த விஷயமானது கமல் ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. எப்படி அந்த மேடையில் லாரன்ஸ் இவ்வாறு பேசலாம் என்று பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வந்தனர். அதனை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் அதற்கு விளக்கமும் அளித்தார்.

Advertisment

இந்நிலையில் கமல்ஹாசனை நேரில் சந்தித்து ஏன் அவ்வாறு அங்கு பேசினேன் என்று விளக்கமளித்திருக்கிறார். அப்போது அவருடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார் ராகவா லாரன்ஸ்.

அந்த பதிவில், “வணக்கம்!அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் மேடையில் நான் கூறிய ஒரு கருத்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் குறித்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விமர்சிக்கப்பட்டது. எனது பேச்சு வேண்டுமென்றே தவறாக திரித்துப் பரப்பப்படுகின்றது என்று ஏற்கனவே நான் விளக்கமளித்துள்ளேன்.

இந்நிலையில் இன்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு.கமல் ஹாசன் அவர்களை நான் நேரில் சந்தித்து விளக்கமளித்தேன்.எனது விளக்கத்தை ஏற்றுக்கொண்ட திரு.கமல் ஹாசன் அவர்கள் என்னை அன்புடன் நலம் விசாரித்து வழியனுப்பினார். அவருக்கு என் நன்றியினையும் என் அன்பையும் இதன் மூலம் தெரிவித்துக்கொள்கின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.

actor raghava lawrence kamalhassan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe