Advertisment

ஜெ. அன்பழகன் குறித்த நினைவைப் பகிர்ந்த ராகவா லாரன்ஸ்!

raghava lawrence

Advertisment

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் (62 வயது) காலமானார். சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை 8.05 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. ஜெ.அன்பழகன் மறைவுக்கு அரசியல் கட்சித்தலைவர்கள் தொடர்சியாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் அவர் திரையுலகில் பல படங்களுக்கு விநியோகஸ்தகராக செயல்பட்டுள்ளார், அமீரின் இயக்கத்தில் உருவான 'ஆதிபகவன்' படத்தைத் தயரித்தும் உள்ளார்.

இந்நிலையில் ஜெ. அன்பழகனின் மறைவிற்கு நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதில், "சட்டமன்ற உறுப்பினர்ஜெ.அன்பழகனின் மறைவு செய்தியைக் கேட்டு மிகவும் மனவேதனையில் இருக்கின்றேன்.

Advertisment

நான் இந்தத் நேரத்தில் ஒன்றைப் பகிர்ந்துகொள்ள நினைக்கின்றேன். ஒருமுறை என் ட்ரஸ்ட் குழந்தைகளுடன் கலைஞர் கருணாநிதி ஐயாவை சந்தித்தபோது, என்னுடைய சமூக பணியை மிகவும் பாராட்டினார். நான் எப்போதும் அவருடைய வார்த்தைகளை மறக்க மாட்டேன். அவரது குடும்பத்தாருக்கும், தி.மு.க. கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய ஆன்மா சாந்தியடைய நானும் எனது குழந்தைகளும் இறைவனை வேண்டுகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

j anbazhagan actor raghava lawrence
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe