Raghava Lawrence

Advertisment

நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸுக்கு எல்வின் என்ற சகோதரர் உள்ளார். இவர், லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான காஞ்சனா 2 படத்தில் ஒரு பாடல் காட்சியில் திரையில் தோன்றினார். அதன் பிறகு, தம்பியை கதாநாயகனாக வைத்து ஒரு படம் தயாரிக்கவுள்ளதாக நடிகர் லாரன்ஸ் அறிவித்தார். பின், அப்படம் குறித்து எந்தத் தகவலும் வெளியாகாமல் இருந்தது.

இந்த நிலையில், பிரபல தயாரிப்பு நிறுவனமான ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் எல்வின் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தில் நடிகர் ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இது குறித்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ள ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம், முன்னணி நடிகர் ஒருவரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. பிற நடிகர் நடிகை மற்றும் தொழில்நுட்பக்கலைஞர்கள் குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகவுள்ளன.