
‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ போன்றவெற்றி படங்களைத் தயாரித்தவர் ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் ஆர். கதிரேசன். இவரும் இயக்குநர் வெற்றிமாறனும் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கவுள்ளார். 'அதிகாரம்' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி தன்னுடைய கிராஸ் ரூட் ஃபிலிம்ஸ் சார்பாக தயாரிக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன்.
இப்படத்தை வெற்றிமாறனின் உதவி இயக்குநரும், ‘எதிர்நீச்சல்’, ‘காக்கிச்சட்டை’, ‘கொடி’, ‘பட்டாஸ்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய துரை. செந்தில்குமார் 'அதிகாரம்' படத்தை இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த வருடம் இறுதியில் தொடங்க இருக்கிறது. மலேசியாவில் சுமார் 50 நாட்களும், இந்தியாவில் பல இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இப்படத்தின் மோஷன் போஸ்டரும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)