/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/EfZaHhTVAAUGy0H.jpg)
கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறது. இந்தியாவில் பல பிரபலங்களும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மையில் பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கூட இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். இதையடுத்து நேற்று மாலை அவரது உடல் நலம் குறித்த தகவலை வெளியிட்ட மருத்துவமனை நிர்வாகம், அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாக தெரிவித்துள்ளது. உடல் நிலை தற்போது சீராக உள்ளதாகவும் தெரிவித்தது.
இதைத்தொடர்ந்து நேற்று இரவு திடீரென பாடகர் எஸ்.பி.பி கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவர் இறந்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எஸ்.பி.பி உடல்நிலை குறித்த தகவல் வெளியானவுடன் பல்வேறு பிரபலங்கள் அவர் பூரண நலம்பெற பிரார்த்தனை செய்வதாக சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வந்தார்கள். இதையடுத்து அவரது மகன் எஸ்.பி.பி சரண் ''அவர் உடல்நிலை சீராக உள்ளது. வதந்திகளை நம்ப வேண்டாம்" என விளக்கம் அளித்தார். இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் எஸ்.பி.பி குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்...
"எஸ்.பி.பி சார் கோவிட்லிருந்து மீண்டு விரைவில் திரும்பி வருவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அவர் ஒரு சிறந்த பாடகர் மற்றும் ஒரு சிறந்த மனிதர். அவர் 7 ஆண்டுகளுக்கு முன்பு என் ஆசிரமத்திற்கு வந்து என் குழந்தைகளுக்கு தனது சொந்த கைகளால் உணவு பரிமாறினார். அவருடைய சேவையும் நல்ல இதயமும் அவரைக் காப்பாற்றும். ராகவேந்திர சுவாமி அவரை விரைவில் நோயிலிருந்து மீட்க நானும் எனது குழந்தைகளும் பிரார்த்தனை செய்கிறோம். எல்லோரும், தயவுசெய்து அவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள்" என கூறியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)