நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளான இன்று இந்திய பிரபலங்கள் பலர் அவருக்கு சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ரஜினிகாந்தின் தீவிர ரசிகரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் ரஜினி காந்துக்கு பிரார்த்தனை மேற்கொள்வதற்காக திருவான்மியூரிலுள்ள மருந்தீஸ்வரர் கோவிலுக்கு சென்றார். சுவாமி தரிசனம் செய்தவுடன் செய்தியாளர்களை சந்தித்த ராகவா லாரன்ஸ், “ரஜினி காந்தின் பலகோடி ரசிகர்களில் தானும் ஒருவன். அவரின் அரசியல் பயணத்திற்கு துணை நிற்பேன் என்று நான் எப்போதும் கூறியதில்லை. நான் அரசியலுக்குள் வருவது எனது தாயாருக்கு பிடிக்காது. அதனால் அவர் எந்த இடத்திற்கு சென்றாலும் வெற்றிபெற வேண்டும் என்று வேண்டிக்கொள்வேன். எனக்கும் அரசியலுக்கு எந்த சம்மந்தமும் இல்லை” என்று கூறினார்.
‘அரசியலில் ரஜினியுடன் நிற்க மாட்டேன்’ - ராகவா லாரன்ஸ்
Advertisment