
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் 15/08/1975ஆம் ஆண்டு வெளியான 'அபூர்வ ராகங்கள்' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்படி ரஜினிகாந்த் சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்து வரும் 15ஆம் தேதியோடு 45 வருடங்கள் நிறைவாகிறது. இதனை முன்னிட்டு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் இப்போதே கொண்டாட்டத்தை ஆரம்பித்துள்ளனர். ரஜினியின் 45 ஆண்டுகள் என்ற போஸ்டரை சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகின்ற நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் ரஜினியின் கால் பாதத்தை ட்விட்டரில் பதிவிட்டு அவரை பாராட்டியுள்ளார். அதில்...
"ரஜினியிசத்தின் 45 ஆண்டுகளைக் சினிமா கொண்டாடுவது வேற லெவல். இதை நான் அவரது ரசிகராக இருந்து காண்பதை நான் மிகவும் மகிழ்ச்சியும், பெருமிதமும் கொள்கிறேன். அவரின் கடின உழைப்பு மற்றும் எளிமை காரணமாக அனைவருக்கும் அவர் ஒரு குருவாக திகழ்கிறார். அவரின் நல்ல ஆரோக்கியத்துக்காகவும், செல்வத்துக்காகவும் நான் ராகவேந்திரா சுவாமியை பிரார்த்திக்கிறேன். குருவே சரணம்" என கூறியுள்ளார்.