Advertisment

ரஜினிகாந்த் முடிவு குறித்து நடிகர் லாரன்ஸ் கருத்து!

Raghava Lawrence

தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமான நடிகர் ரஜினிகாந்த், தான் அரசியலுக்கு வரப்போவதில்லையென நேற்று அறிவித்தார். இதனையடுத்து, அவரது அரசியல் பிரவேசம் குறித்து நீடித்து வந்த குழப்பங்கள் முடிவுக்கு வந்துள்ளன. நடிகர் ரஜினிகாந்தின் இந்த முடிவால் ஏமாற்றமடைந்த அவரது ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் முடிவு குறித்து அவரது ஆதரவாளரும் நடிகருமான லாரன்ஸ் கருத்துத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "குருவே.. நீங்கள் எடுத்த முடிவு 100 சதவிகிதம் சரியானதே. மற்ற அனைத்தையும் விட உங்கள் உடல்நலமே எங்களுக்கு முக்கியம். உங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ள மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு சுயநலமற்ற இந்த முடிவை எடுத்துள்ளீர்கள். மற்றவர்களைப் பற்றி நீங்கள் என்றும் கவலைப்படுவதே உங்களைச் சிறந்த மனிதராக்கியுள்ளது. உங்களது உடல்நலத்திற்காக ராகவேந்திரா சாமியைப் பிரார்த்திக்கிறேன். குருவே சரணம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

actor raghava lawrence
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe