Advertisment

கமல் போஸ்டரை ஏன் அசிங்கப்படுத்தினேன்? விளக்கமளித்த ராகவா லாரன்ஸ்...

கடந்த 7ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் ரஜினியின் தர்பார் பட இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ரஜினி, முருகதாஸ், அனிருத், யோகி பாபு, விவேக், ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட நடிகர்கள் கலந்துகொண்டனர். அப்போது, “கமல் போஸ்டருக்கு நான் சாணி பூசி இருக்கேன். அது அப்போ விவரம் தெரியாதபோது செய்தது. ஆனால், கமல், ரஜினி இவ்வளவு ஒண்ணா இருப்பாங்க என்று எனக்கு தெரியாது” என்று பேசினார். இது கமல் ரசிகர்களிடையே பெரும் சர்ச்சையை கிளப்பியது.

Advertisment

lawrence

இது குறித்து ட்விட்டரில் விளக்கமளித்துள்ளார். அதில், “கமல் பட போஸ்டரின் மீது சாணி அடித்தது பற்றி பேசியதை சிலர் மிகைப்படுத்தி வருகின்றனர். அதி தீவிர ரஜினி ரசிகனாக இருந்த போது சிறுவயதில் தன்னை அறியாமல் கமலுக்கு எதிராக அந்த காரியத்தை செய்தேன்.

Advertisment

கமல் மீது அதிக மரியாதை உள்ளது. நான் பேசியது தவறு என நினைத்தால் யாரிடம் வேண்டுமானாலும் மன்னிப்பு கேட்பேன். தர்பார் இசை வெளியீட்டு விழாவில், பேசியதை முழுமையாக கேட்டால் உண்மை புரியும் . அதில் கமலை பற்றி தவறாக ஏதும் பேசவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

kamalhassan rajnikanth darbar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe