Advertisment

“இப்போது எங்களுக்கு அக்‌ஷய் குமார் கடவுளாகியிருக்கிறார்”- ராகவா லாரன்ஸ் நெகிழ்ச்சி

நடன இயக்குனராக தன்னுடைய சினிமா வாழ்க்கையை தொடங்கி தற்போது பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமான அக்‌ஷய் குமாரை வைத்து ‘லக்‌ஷ்மி பாம்’ என்றொரு படத்தை இயக்கி வருகிறார் ராகவா லாரன்ஸ்.

Advertisment

akshay kumar

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

தமிழில் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த படம் காஞ்சனா. இந்த திரைப்படம் ரசிகர்களை பெருமளவில் கவர, காஞ்சனா 3 பாகம் வரை வெளியாகி வெற்றிகரமாக ஓடியுள்ளது.

இந்நிலையில் ‘காஞ்சனா’ படத்தை ஹிந்தியில் அக்‌ஷய் குமாரை வைத்து ரீமேக் செய்து வருகிறார் ராகவா லாரன்ஸ். அக்‌ஷய் குமார் கதாநாயகனாக நடிக்க கியாரா அத்வானி ஹீரோயினாக நடிக்கின்றார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார் ராகவா லாரன்ஸ். இந்நிலையில் லாரன்ஸின் ட்ரஸ்ட் தொடங்கப்பட்டு 15 வருடங்கள் ஆகின்றது. இதை கொண்டாடும் வகையில் திருநங்கைகளுக்கு என இல்லம் கட்ட திட்டமிட்டுள்ளார்கள். இதுகுறித்து லக்‌ஷ்மி பாம் ஷூட்டிங்கில் அக்‌ஷய் குமாரிடம் தெரிவித்தபோது உடனடியாக 1.5 கோடி நிதியை உதவியாக கொடுத்திருப்பதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார் ராகவா லாரன்ஸ்.

மேலும் அந்த பதிவில், “உதவி செய்பவர்கள் அனைவரையுமே நான் கடவுளாக நினைப்பேன். இப்போது எங்களுக்கு அக்‌ஷய் குமார் கடவுளாகியிருக்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார் லார்ன்ஸ்.

raghava lawrence akshaykumar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe