/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/86_41.jpg)
2012ல் பிரகாஷ் ராஜ் இயக்கி நடித்த 'தோனி' படத்தின் மூலம் கோலிவுட்டிற்கு அறிமுகமானவர் நடிகை ராதிகா ஆப்தே. பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர், ரஜினியின் கபாலி படம் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார். இதனிடையே கார்த்தியின் 'அழகுராஜா', 'சித்திரம் பேசுதடி 2' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இப்போது விஜய் சேதுபதி, கத்ரினா கைஃப் நடிப்பில் நேற்று வெளியாகியுள்ள மெரி கிறுஸ்துமஸ் படத்திலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில் ராதிகா ஆப்தே, விமான நிலையம் ஒன்றில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஏரோ பிரிட்ஜில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக தனது சமூக வலை தளப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவில், “இன்று காலை 8.30 மணிக்கு எனக்கு விமானம். இப்போது மணி 10.50. இன்னும் விமானம் ஏறவில்லை. ஆனால், விமானம் ஏறப்போவதாக கூறி, அனைத்து பயணிகளையும் ஏரோ பிரிட்ஜில் வைத்து பூட்டி விட்டனர். அதில் சிறிய குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட பயணிகளும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அடைக்கப்பட்டனர். பாதுகாவலர்கள் கதவை திறக்கவில்லை. அதிகாரிகளுக்கும் எதுவும் தெரியவில்லை. உள்ளே குடிநீர் வசதியோ கழிவறை வசதியோ இல்லை. வேடிக்கையான இந்தப் பயணத்துக்கு நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)