Advertisment

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ராதிகா சரத்குமாருக்கு விருது 

radhika sarathkumar get award uk parliament

80களில் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ராதிகா.தற்போதும்பல படங்களில்கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவர் ரடான் மீடியா ஒர்க்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும் இருந்து வருகிறார்.

Advertisment

இந்நிலையில் திரைத்துறையில் திறன்படசெயல்பட்டதற்காக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விருது பெற்றுள்ளார். தமிழ் ஸ்டடீஸ் யூகே எனும் அமைப்பின் சார்பாக இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் மரியா மில்லர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் உலகெங்கும் பல்வேறு துறைகளில் சாதித்த பெண்கள் கவுரவிக்கப்பட்டனர். இந்த உயரிய விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் ராதிகா சரத்குமாரும் ஒருவர்.

Advertisment

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விருது பெற்ற கையோடு, பேசிய ராதிகா சரத்குமார், “இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விருது பெற்றது மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் நிரம்பிய தருணம். இவ்விருதிற்கு என்னை தேர்ந்தெடுத்த தேர்வு குழுவினருக்கும், இத்தனை ஆண்டு காலம் எனக்கு ஆதரவளித்த திரை மற்றும் தொலைக்காட்சித் துறையினருக்கும், குடும்பத்தினருக்கும் மிக்க நன்றி,” என்று கூறியுள்ளார்.

Award radhika tamil cinema
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe