radhika sarathkumar condolence daniel balaji passed away

காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், பைரவா, உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் டேனியல் பாலாஜி(48). திருவான்மியூரில் தனியாக வசித்து வந்த நிலையில் நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து கொட்டிவாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.

Advertisment

இவரது மறைவு திரைத்துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டேனியல் பாலாஜியின் மறைவு செய்தி அறிந்த இயக்குநர்கள் கௌதம் மேனன், வெற்றிமாறன், அமீர் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் அஞ்சலிக்காக அவருடைய உடல் வைக்கப்பட்டுள்ளது. டேனியல் பாலாஜி ஏற்கனவே கண்களை தானம் செய்திருந்த நிலையில் அவருடைய கண்கள் தானமாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

Advertisment

radhika sarathkumar condolence daniel balaji passed away

திரைத்துறை சார்ந்த பிரபலங்கள் அவரது மறைவுக்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாக இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ராதிகா, “நம்பமுடியவில்லை. டேனியல் பாலாஜி எங்களது ராடான் சித்தி தொடரில் அறிமுகமான ஒரு திறமை மிக்க நடிகர். நெகடிவ் ரோலில் சித்தி தொடரில் நடித்த போதிலும் பெரும் புகழ் அவருக்கு கிடைத்தது. அருமையான மனிதர் அவர். அவரது மறைவு என்னை துயரில் ஆழ்த்துகிறது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” என பதிவிட்டுள்ளார்.

டேனியல் பாலாஜி, சிறு வயதிலே ராதிகா நடித்த சித்தி சீரியல் மூலம் நடிகராக அறிமுகமான நிலையில், டேனியல் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த சீரியல் நல்ல வரவேற்பை பெற்றதால், அவர் அடுத்து நடித்த அலைகள் சீரியல் முதல் அவருக்கு டேனியல் பாலாஜி என்று பெயரிடப்பட்டது. அதற்கு முன்பு வரை பாலாஜி என்று மட்டுமே அவருக்கு பெயராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisment