Advertisment

“யுக்தியினால் எங்களை பின்னால் தள்ளிவிட்டார்கள்” - ராதிகா 

radhika sarathkumar about hema committee and caravan camera issue

மலையாளத் திரையுலகில் பாலியல் ரீதியான குற்றங்கள் தொடர்ந்து நடந்து வருவதாக வெளியான ஹேமா கமிட்டி ஆய்வறிக்கை இந்திய திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பிரபல நடிகை ஒருவருக்கு கடந்த 2017ஆம் ஆண்டு பாலியல் கொடுமை அரங்கேறியது. இந்த சம்பவத்தின் விளைவாக படப்பிடிப்பில் ஈடுபடும் நடிகைகள், பெண்கள் என அனைவரின் பாதுகாப்பை உறுதி செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது, இந்த குழுவின் ஆய்வறிக்கை அம்மாநில முதல்வரிடம் 2019ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அந்த அறிக்கை பொதுவெளியில் வெளியாகாமல் இருந்த நிலையில், தகவல் உரிமை ஆணையத்தின் தலையீட்டால் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

Advertisment

இதையடுத்து நடிகைகள் பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்களை பொதுவெளியில் தெரிவித்து வருகின்றனர். நடிகைகள் ஸ்ரீலேகா மித்ரா, ரேவதி சம்பத், மினுமுனீர், சர்மிளா மற்றும் இன்னும் ஒரு நடிகை இது வரை புகார் அளித்த நிலையில் சம்பந்தப்பட்ட பிரபலங்கள் இயக்குநர் ரஞ்சித், நடிகர் சித்திக், நடிகர் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. முகேஷ் உள்ளிட்ட பலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த புகார்கள் தொடர்பாக அம்மாநில அரசு சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே தேசிய மகளிர் ஆணையம் ஒரு வாரத்திற்குள் ஹேமா கமிட்டி ஆய்வறிக்கையின் முழு வடிவத்தையும் வழங்கக் கோரி கேரள அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

Advertisment

இதற்கிடையே பாலியல் புகார்கள் தொடர்ந்து எழுந்து வந்ததால் மலையாள நடிகர் சங்கமான அம்மா அமைப்பு நிர்வாகிகள் தலைவர் மோகன்லால் உட்பட 17 செயற்குழு உறுப்பினர்கள் கூண்டோடு தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்தனர். மேலும் அம்மா அமைப்பை கலைத்தனர். இந்த ஹேமா அறிக்கை விவகாரம் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டு என ப்ரித்விராஜ், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பல மலையாள திரைபிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக நடிகை ராதிகா, பாலியல் துன்புறுத்தல் மலையாளத்தில் மட்டுமல்ல தமிழிலும் நடக்கிறது என்றும் கேரவனில் ரகசிய கேமரா பொருத்தி நடிகைகள் உடை மாற்றுவதை படம்பிடித்து வந்ததாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். மேலும், பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். இதையடுத்து கேரவன் குறித்து ராதிகாவின் குற்றச்சாட்டிற்கு, கேரவன் உரிமையாளர் சங்கத்தின் தலைவர், தமிழ் சினிமாவில் அப்படி கேரவனில் ரகசிய கேமரா பொருத்தப்படுவது இல்லை எனத் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, ராதிகாவிடம் சிறப்பு புலனாய்வுக் விசாரணை குழு தொலைப்பேசி வாயிலாக விசாரணை நடத்தினார்கள். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ராதிகா, “சிறப்பு புலனாய்வுக் குழு எனக்கு கால் செய்தார்கள். கேரவன் சம்பவம் தொடர்பாக கேள்விகள் கேட்டார்கள் நானும் நடந்தது என்று கூறினேன். ஆனால் வழக்கு கொடுக்காததால் அவர்கள் என்னிடம் விசாரிக்கவில்லை. அதுபோல நடந்ததா? என்று மட்டும்தான் கேட்டார்கள், நானும் விவரித்தேன். தமிழ் சினிமாவில் தற்போது அக்கிரமம் குறைந்துவிட்டது. ஆனால் எங்கோ ஒரு இடத்தில் தவறுகள் நடந்திருக்கலாம். கேரவன் என்பது ஹீரோ கட்டுப்பாட்டில் இல்லை. ஹேமா கமிட்டியில் நிறைய விஷயங்களில் பாதுகாப்புகள் கொடுக்க வேண்டும் என சொல்லியிருக்கிறார்கள். அதனால் கேரவனிலும் பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக இப்போது சொன்னேன். வருங்கால நடிகைகளுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும். பெரிய நடிகர்கள் ஆதரவு தந்தால் ஆறுதலாக இருக்கும். ஒவ்வொரு நடிகைக்கும் ஒரு கதை உள்ளது. அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்.

பெண்கள் பிரவியிலே தைரியமானவர்கள். எங்களால் எல்லாமே செய்ய முடியும். ஆனால் மார்கெட் யுக்தியினால் எங்களை பின்னால் தள்ளிவிட்டார்கள். இன்றுவரையும் நாங்கள் போராடிக் கொண்டு இருக்கிறோம்” என்றார்.

mollywood Kerala Raadhika sarathkumar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe