1970களில் தொடங்கி இப்போது வரை பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் ராதிகா. தமிழைத் தாண்டி தெலுங்கிலும் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். இடையே மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் கவனம் செலுத்தி வந்தார். இதனிடையே சின்னதிரையிலும் கால் பதித்து பிரபலமடைந்தார். 

தமிழில் கடைசியாக விஜய் சேதுபதி நடித்த ‘மெரி கிறிஸ்துமஸ்’ படத்தில் நடித்திருந்தார். இப்போது கைவசம் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘ரிவால்வர் ரீட்டா’ படத்தை வைத்துள்ளார். சினிமாவை தாண்டி அரசியலிலும் பயணித்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டார். 

இந்த நிலையில் ராதிகா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். டெங்கு காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வருவதாகவும் இன்னும் சில நாட்களுக்கு பின் சிகிச்சை முடிந்து வீடு திரும்புவுள்ளதாகவும் கூறப்படுகிறது.