radhika apte

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

'கபாலி' படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த ராதிகா ஆப்தே சர்ச்சையான காட்சிகளில் கூட தைரியமாக நடிக்க கூடியவர். அவ்வப்போது இவர் நடித்த கவர்ச்சி காட்சிகளின் ஆபாச படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவுவதனால் பிரபலமாகும் இவர் சமீபத்தில் தென்னிந்திய நடிகர் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பையும் ஏற்படுத்தினார். இந்நிலையில் தன் சினிமா வாய்ப்பு குறித்தும், செய்த தவறுகள் பற்றியும் இவர் பேசும்போது...

Advertisment

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

"சினிமா துறையில் பின்புலம் இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் எளிதாக கிடைத்து விடுகின்றன. அப்படியே பின்புலம் உள்ளவர்கள் உறவினர்கள் உதவியால் வாய்ப்புகள் பெற்றாலும் திறமை இருந்தால்தான் நிலைக்க முடியும். நான் எந்த பின்னணியும் இல்லாமல்தான் சினிமாவுக்கு வந்தேன். நிறைய கஷ்டங்களை எதிர்கொண்டேன். அதை என்னால் தவிர்க்க முடியவில்லை. சினிமா துறைக்கு வந்தபோது எந்த மாதிரி கதைகளில் நடிக்க கூடாது என்று நினைத்து இருந்தேனோ அந்த படங்களில்தான் நடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. என் பிழைப்புக்கு தேவையான பணத்துக்காக அதுபோன்ற மோசமான படங்களை என்னால் தவிர்க்க முடியாமல் போய் தவறாகிவிட்டது. இப்போது எனக்கு பெயர் புகழ் கிடைத்து விட்டது. நிறைய பட வாய்ப்புகளும் வருகின்றன. இதனால் எல்லா கதைகளுக்கும் ஒப்புக்கொள்ளாமல் எனக்கு பிடித்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறேன்" என்றார்.

Advertisment

style="display:inline-block;"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9546799378">