பாலிவுட் நடிகை ராதிக அப்தே தற்போது ‘லாஸ்ட் டேய்ஸ்’ என்ற ஆங்கில படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அக்டோபர் 25ஆம் தேதி வெளியாகவுள்ளது. தமிழ் ரசிகர்கள் மத்தியில் ரஜினி நடித்த கபாலி படம் மூலம் பிரபலமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பிரிட்டனை பெனடிக்ட் டெய்லர் என்ற இசைக்கலைஞரைத் திருமணம் செய்து கொண்டார். 2013ஆம் ஆண்டு இவர்களது திருமண விழா நடந்தது. பின்பு 2024ஆம் ஆண்டு ராதிகா ஆப்தே கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். அப்போது ஒரு படத்தில் நடித்த அவர், தனக்கு ஏற்பட்ட அசௌகரியமான சூழலை சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
ராதிகா ஆப்தே, கூறுகையில், “ஒரு படப்பிடிப்பில் நான் கர்ப்பமாக இருப்பதாக சொன்ன போதிலும் ஒரு தயாரிப்பாளர் இறுக்கமான உடை அணிய வேண்டும் என வலியுறுத்தினார். அப்போது நான் மூன்று மாத கர்ப்பிணியாக இருந்தேன். மேலும் கர்ப்பிணி காலத்தில் பின்பற்றப்படும் சாப்பாட்டு வரைமுறையைத் தொடர்ந்து வந்தேன். அதனால் உடலில் சில மாற்றங்களை நான் சந்தித்தேன். ஆனால் அதனை அந்த தயாரிப்பாளர் புரிந்து கொள்ளாமல் உணர்ச்சியற்ற மனிதராக நடந்து கொண்டார். படப்பிடிப்பில் வலி மற்றும் அசௌகரியமாக இருந்த போது, ஒரு மருத்துவரைக் கூட அவர் என்னைப் பார்க்க அனுமதிக்கவில்லை. அது என்னை மிகவும் காயப்படுத்தியது. ஆனால் நான் ஒரு ஹாலிவுட் படத்தில் கர்ப்பிணியாக இருக்கும் போது நடித்து கொண்டிருந்த போது அப்படத்தின் தயாரிப்பாளர் என் நிலைமையைப் புரிந்து கொண்டு எனக்கு ஆதரவாக இருந்தார்.
கமிட்மெண்ட் இருப்பதை நான் புரிந்து கொள்கிறேன். அதை மிகவும் மதிக்கிறேன். ஆனால் கொஞ்சம் கூட இறக்கம் இல்லாமல் இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. நான் ஒன்றும் எனக்காக ஸ்பெஷலாக எதுவும் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கவில்லை. கருணையும் மனிதாபிமானத்தை மட்டுமே எதிர்பார்க்கிறேன்” என்றார்.