ஹிந்தி நடிகை ராதிகா ஆப்தே தமிழில் ஆல் இன் ஆல் அழகுராஜா, தோனி, கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

Advertisment

radhika apte

ஹிந்தி சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை வைத்திருக்கும் ராதிகா ஆப்தே நடிப்பில் கடந்த வருடம் வெளியான அந்தாதுன் செம ஹிட் அடித்தது. இதனை அடுத்து தற்போது இரண்டு ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார் ராதிகா.

Advertisment

ராதிகா ஆப்தே எவ்வாறு உடல் எடையை சரியாக கண்ட்ரோல் செய்கிறார். எப்படி உணவு கட்டுப்பாட்டில் அக்கரையுடன் இருக்கிறீர்கள் என்று பேட்டி எடுப்பவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்தவர்.

ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் வெளிவந்த விக்கி டோனார் என்ற படத்திற்கு முதலில் நடிகையாக நான் தான் தேர்வு செய்யப்பட்டேன். அதனை அடுத்து வெளிநாட்டிற்கு சென்றபோது எக்கச்சக்கமாக பீர் குடித்து உடல் எடை அதிகரித்தது. அப்போது என் உடல் எடையை பார்த்த இயக்குநர் என்னை படத்திலிருந்து நீக்கினார்.

Advertisment

நான் என் உடல் எடையை குறைத்து விடுகிறேன் என கூறியும் அவர் என் பேச்சை கேட்காமல் படத்தில் இருந்து நீக்கினார்.அதன் பிறகு உணவு கட்டுப்பாட்டில் கவனமாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.