Published on 31/03/2020 | Edited on 31/03/2020
ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என ரவுண்டுகட்டி அடிக்கும் நடிகை ராதிகா ஆப்தே தமிழில் பிரகாஷ் ராஜுடன் தோனி மற்றும் ரஜினியுடன் கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவர் கடந்த 2012ஆம் ஆண்டு லண்டனைச் சேர்ந்த இசைக்கலைஞர் பெனடிக்ட் டெய்லர் என்பவரைத் திருமணம் செய்துகொண்டு அங்கேயே செட்டில் ஆனார். இருந்தும் அவர் படங்களில் நடிப்பதை நிறுத்தாமல் இருக்கும் நிலையில் சமீபத்தில் லண்டன் மருத்துவமனையில் மாஸ்க் அணிந்தபடி அமர்ந்துள்ள தன் படத்தை சமூக வலைத்தளத்தில் ராதிகா ஆப்தே பதிவிட்டார். அதில்...'தனக்கு கொரோனா இல்லை என்றும், லண்டனுக்கு சில நாட்களுக்கு முன் தான் வந்தேன், அதனால் தான் சோதனைக்காக மருத்துவர்களை அணுகினேன்.வழக்கமான பரிசோதனைக்கே வந்துள்ளேன்' என்றும் குறிப்பிட்டுள்ளார்.