Advertisment

மருத்துவமனைக்கு நன்கொடை... பிரபாஸ் படக்குழுவினருக்கு குவியும் பாராட்டுகள்!

prabhas

யுவி கிரியேஷன்ஸ் மற்றும் கோபி கிருஷ்ணா மூவிஸ் தயாரிப்பில் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ராதே ஷ்யாம்’. இப்படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை ராதா கிருஷ்ணகுமார் இயக்கியுள்ளார். இப்படம் தெலுங்கு, இந்தி என இரு மொழிகளில் உருவாகியுள்ளது.

Advertisment

70களின் காலத்தில் இத்தாலியில் இருந்த மருத்துவமனை அமைப்பில் அரங்குகள் அமைத்து, படக்குழு படப்பிடிப்பு நடத்தியது. தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதால், படப்பிடிப்பின்போது பயன்படுத்தப்பட்ட படுக்கைகள், பிபிஇ கிட் உடைகள், நோயாளியை அழைத்துச் செல்வதற்கான சக்கர வண்டி உள்ளிட்டவற்றை ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குப் படக்குழு நன்கொடையாக அளித்துள்ளது.இவையனைத்தும் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படவுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் இருந்த பொருட்களைமொத்தம் 9 வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, ‘ராதே ஷ்யாம்’ படக்குழுவினருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

Advertisment

prabhas
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe